LG G7+ திங்க்யூ: கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.!

  40 ஆயிரத்திற்கு உட்பட்ட விலையில் கிடைக்கும் மிகச் சிறந்த ஸ்மார்ட்போனாக LG G7+ திங்க்யூ சுட்டிக்காட்டிவதில் ஐயம் தேவையில்லை. இதில் 6.1 இன்ச் ஸ்கிரீன் உடன் 19.5:9 விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளது. இதன் IPS LCD ஸ்கிரீனில் 1,440 x 3,120 பிக்ஸல் பகுப்பாய்வு மற்றும் 564ppi பிக்ஸல் அடர்த்தியை கொண்டுள்ளது. இதில் RGBW பிக்ஸல் நேர்த்தி இருப்பதால், 1000 நைட்ஸ் வரை ஒளிர்வு நிலைகளை பெற முடிகிறது. இதனால் நேரடி சூரிய ஒளியில் கூட LG G7+ திங்க்யூ-வில் உள்ள IPS LCD ஸ்கிரீனில் தெளிவாக பார்க்கலாம்.

  LG G7+ திங்க்யூ: கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.!


  இதில் உள்ள குவாட் HD+ டிஸ்ப்ளே மூலம் கவர்ச்சியான கன்ட்ராஸ்ட் விகிதம் மற்றும் சிறப்பான பார்வை கோணங்களையும் அளிக்கிறது.  சந்தையில் உள்ள பெரும்பாலான முன்னணி ஸ்மார்ட்போன்கள் அளவில் பெரிதாகவும் வழுக்கும் தன்மையோடும் இருப்பதால், ஒற்றை கையில் கையாளுவது கடினம். ஆனால் இந்த வரிசையில் 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட LG G7+ திங்க்யூ ஸ்மார்ட்போன் வேறுபடுகிறது.

  இந்த ஃபோன் நீர் எதிர்ப்பு மட்டுமின்றி, MIL-STD 810G பெற்று அதிர்வுகளையும் தாக்குபிடிக்கும் தன்மை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்னும் பின்னும் கொரில்லா கிளாஸ் 5 இருப்பதால், பாதுகாப்பு வலுவாக உள்ளது. இதற்காக மாங்கனீசு மூலம் ஐ-பீம் ப்ரைம்மை, LG பயன்படுத்தி உள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கைரேகை ஸ்கேனர்

  LG G7+ திங்க்யூ ஃபோனில் தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கமான முறைப்படி பின்புறம் ஏறி செல்லும் பவர் பட்டன் மற்றும் வலதுபக்கத்தில் ஒரு புதிய பவர் பட்டனை பெற்றுள்ளது. கூகுள் அசிஸ்டெண்ட்டிற்காக இடதுபக்கத்தில் பட்டன் காணப்படுகிறது. ஏறிச்செல்லும் கைரேகை ஸ்கேனர் மூலம் ஃபோனை திறக்கலாம். ஃபோனின் கீழ்பகுதியில் டைப்-சி போர்ட இருப்பதால், 3.5மிமீ ஹெட்போன், ஒரு ஸ்பீக்கர் மற்றும் ஒரு மைக்ரோபோன் ஆகியவற்றை இணைக்கலாம். மேற்புறத்தில் சிம்கார்டு ஸ்லாட் மற்றும் ஒரு மைக்ரோபோன் காணப்படுகிறது.

  கேமரா

  இதில் தரமான ஷாட்கள், கவர்ச்சியான விரிகோண ஷாட்கள் மற்றும் போர்ட்ரேட் படங்களை பிடிக்க முடிகிறது. முக்கிய கேமரா 16MP சென்ஸர் உடன் வெளிச்சமான f/1.6 துளையையும் OIS-யையும் பெற்றுள்ளது. இரண்டாவது கேமராவும் 16MP சென்ஸர் மற்றும் OIS-யையும், f/1.9 துளையில் வேலை செய்கிறது. செல்ஃபீ எடுக்க, f/1.9 துளையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா காணப்படுகிறது.

  முதன்மை கேமரா செயல்பாடு

  தரமான விரிகோணம் அல்லாத மோடில் எடுக்கப்படும் படங்கள் தெளிவாக உள்ளன. இதில் ஒளி சரியான முறையில் பயன்படுத்தப்படுவதோடு, HDR ஆட்டோ மோடும் பெறலாம். வீடியோவை பொறுத்த வரை, 4K மற்றும் 1080p என்று ஒத்த சிறப்பாக உள்ளது. செல்ஃபீ கேமரா மூலம் நல்ல சராசரியான படங்களை எடுக்க முடிகிறது.

  விரிகோண மோடில் எடுக்கப்படும் படங்கள் 107 கோண விரிவான பார்வையை அளிக்கிறது. இது முந்தைய LG G வரிசையைச் சேர்ந்த சாதனங்களை விட சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறது.

  குறைந்த ஒளி செயல்பாடு

  இதன் கேமராவில் ஃபோக்கல் நீளமாக 2.38 mm மற்றும் 1200 ISO நிலை நிர்ணயிக்கப்பட்டு, f/1.9 துளை மதிப்பில் எடுக்கப்படும் விரிகோண லென்ஸ் மூலம் சிறப்பான படங்கள் எடுக்க முடிகிறது. ஆனால் மிகவும் வெளிச்சம் குறைவான பகுதியில் எடுக்கப்படும் படங்கள் சிறப்பானவை எனலாம்.

  இதில் AI கேமரா மோடு கூட உள்ளது. இந்த மோடை ஆன் செய்த உடன் காட்சிகளை ப்ரேமில் கண்டறிய ஆரம்பிக்கிறது. இதன்மூலம் உணவு, நிலப்பகுதி, மரங்கள், மக்கள், வீதிகள் ஆகியவற்றின் வித்தியாசத்தை கண்டறிய முடிகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சிறப்பான செயல்பாட்டை காணலாம்.

  ஸ்னாப்டிராகன் 845 மற்றும் 6GB RAM

  முன்னணி வகிக்கும் ஸ்னாப்டிராகன் 845 CPU மூலம் இந்த ஃபோன் இயக்கப்படுகிறது. இதனுடன் 6GB ரேம் மற்றும் 128GB உள்ளக நினைவகத்துடன் செயல்படுகிறது. இதனால் இதமான பன்முக செயல்பாட்டை பெறலாம். இதற்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவை அடிப்படையாக கொண்ட LG UX இன்டர்பேஸின் பயன்பாடு கூட காரணமாகிறது.

  ஆடியோ அனுபவம்

  அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சுற்றுவட்ட ஒலி தன்மை (சரவுண்டி-சவுண்டு பார்மேட்) DTS:X அம்சத்தை கொண்டுள்ளது. சிறப்பான ஆடியோ வெளியீட்டை அளிக்கும் வகையில், Hi-Fi குவாட் DAC அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் நிகரற்ற உயர்தர ஆடியோவை வழங்க, இதன் பேக்கேஜ்ஜில் உயர்தர இயர்போன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

  இதன் கீழ்பகுதியில் புதிய பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளது கவனிக்க வேண்டியது.

  பேட்டரி செயல்பாடு

  பேட்டரி செயல்பாடு மட்டுமே சற்று வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதில் 3,000mAh பேட்டரி அளிக்கப்பட்டுள்ளதால், சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 CPU இயக்கத்தில், ஒரு நாள் மட்டுமே தாக்குபிடிக்க முடிகிறது. 9 மணிநேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தினால், பேட்டரி கடும் சரிவை சந்திக்கிறது.

  முடிவு

  LG G7+ திங்க்யூ சற்று தாமதமாக வந்தாலும், ரூ.40 ஆயிரத்திற்கு குறைவான விலை பிரிவில் முழுமையான வெற்றியாளர் எனலாம். சிறந்த டிஸ்ப்ளே, பிரிமியம் மற்றும் நிலைநிற்கும் வடிவமைப்பு, மதிப்பு கூட்டப்பட்ட கேமரா மற்றும் நிலையான ஆடியோ செயல்பாடு ஆகியவற்றை கொண்டுள்ளது. இது தவிர, விரிவாக்கம் செய்யக்கூடிய சேமிப்பகம், 3.5 மிமீ ஹெட்போன் ஜெக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய சிறப்புகள் உள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  LG G7 plus ThinQ Review: Best value for money smartphone in sub Rs. 40k price-point: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more