4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி ஜி7.!
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
எல்ஜி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி கொண்ட எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சாதனம் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக செயல்பாடுகள் கொண்ட மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4.0 ஃபாஸ்ட் சார்ஜ் :
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 2560 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு
ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டூயல் செல்பீ கேமரா:
இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமார இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும 16எம்பி ரியர்
கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பேட்டரி:
இக்கருவி 3500எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications