எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இப்போது வெளிவந்துள்ள அறிக்கையில் எல்ஜி ஜி7- ஸ்மார்ட்போன் மாடல் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் கூடிய விரைவில் இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 2,560×1,440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டூயல் செல்பீ கேமரா:
இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமார இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

3500எம்ஏஎச்:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications