எல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 பிளஸ் : இந்திய வெளியீடு எப்போது.?

எல்ஜி ஜி 6 பிளஸ் ரூ.57,224/- என்ற விலை நிர்ணயத்தையும், எல்ஜி ஜி6 ப்ரோ பதிப்பானது சுமார் ரூ.45,777/-என்ற விலை நிர்ணயத்தை கொண்டதாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

|

சமீபத்தில் எல்ஜி நிறுவனம் தென் கொரியாவில் அதன் இரண்டு எல்ஜி ஜி6 சசாதனங்களை அறிமுகம் செய்தது. எல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 ப்ளஸ் என்ற பெயரிடப்பட்ட அந்த ஸ்மார்ட்போன் ஜூன் 27-ஆம் தேதி நாட்டில் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 பிளஸ் : இந்திய வெளியீடு எப்போது.?
ஈடிநியூஸ் செய்தியின்படி, எல்ஜி ஜி 6 பிளஸ் ரூ.57,224/- என்ற விலை நிர்ணயத்தையும், எல்ஜி ஜி6 ப்ரோ பதிப்பானது சுமார் ரூ.45,777/-என்ற விலை நிர்ணயத்தை கொண்டதாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

மேலும் எஸ்.கே. டெலிகாம், எல்ஜி டெலிகாம் மற்றும் கே.டி.எஃப். உட்பட மூன்று பெரிய நிறுவனங்களுடன் இந்த இரண்டு சாதனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், வரவிருக்கும் சாதனங்களின் குறிப்புகள் அவ்வளவாக அறியபபடவில்லை. இருப்பினும் கூட எல்ஜி அசல் ஜி6 மாதிரியில் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கும் "ஆப்டிகல் அஸ்ட்ரோ பிளாக்" என்ற புதிய வண்ண விருப்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 பிளஸ் : இந்திய வெளியீடு எப்போது.?

எல்ஜி ஜி 6 பிளஸ் ஆனது 128 ஜிபி உள் சேமிப்புடன், வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கும் மறுபக்கம் ஜி6 ப்ரோ ஆனது 32 ஜிபி சேமிப்புடன், குறைந்த அளவிலான தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவுடன் வெளியாகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் எல்ஜி வி30 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அந்த ஸ்மார்ட்போன் 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்புகளில் வரும் என்றும் தெரிவித்துள்ளது. இறுதியாக, எல்ஜி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களில் எல்ஜி பே சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனினும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இல்லை என்பதால் வெளியாகும் லீக்ஸ் தகவலில் இருந்து உப்பின் ஒரு சிட்டிகை அளவான விடயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.

Best Mobiles in India

Read more about:
English summary
LG G6 Pro and G6 Plus to be announced on June 27: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X