எல்ஜி ஜி6 கருவியின் இறுதி பதிப்பு லீக் புகைப்படம்.!
உலோகம் மூலம் செய்யப்பட்ட, மிக மெலிந்த பெசல்கள் கொண்ட வடிவமைப்பும் உடன் இரட்டை கேமராக்கள் மற்றும் இன்னும் நிறைய தண்ணீர் எதிர்ப்பு பாதுகாப்பு இடம்பெறும்.
எல்ஜி ஜி6 கருவி சார்ந்த வதந்திகள் மற்றும் லீக்ஸ் தகவல்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெள்ளம் போல வெளியான வந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் எல்ஜி நிறுவனம் நிச்சயமாக வரும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

முந்தைய கசிவுகளின்படி இந்த தொலைபேசி உலோகம் மூலம் செய்யப்பட்ட, மிக மெலிந்த பெசல்கள் கொண்ட வடிவமைப்பும் உடன் இரட்டை கேமராக்கள் மற்றும் இன்னும் நிறைய தண்ணீர் எதிர்ப்பு பாதுகாப்பு இடம்பெறும் என்பது தெரிய வந்தது.
இப்போது வெளியாகியுள்ள ஒரு நேரடி ஷாட் ஆனது எல்ஜி ஜி6 கருவியின் இறுதி பதிப்புக்கு அருகாமையில் நம்மை கொண்டு செல்கிறது என்றே கூறலாம். இந்த லீக் படத்தின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் பின்புற கைரேகை சென்சார் இருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு இரட்டை எல்இடி ஃப்ளாஷ் மற்றும் கீழே ஜி6 என்ற லோகோவும் இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து இக்கருவி ஒரு வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது உடன் கண்ணாடி உடல் கொண்ட ஐபோன் 7 போன்ற ஒரு பளபளப்பான கருப்பு பூச்சு கொண்டுள்ளதையும் இந்த லீக் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க
3ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 635 உடன் சியோமி மி 5சி.!?


Click it and Unblock the Notifications