5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி ஜி6 லைட்.!
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
தென் கொரிய உற்பத்தியாளரான எல்ஜி நிறுவனம் தற்சமயம் எல்ஜி ஜி6 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் எம்டபள்யுசி-2018 நிகழ்ச்சியில் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி ஜி6 லைட் :
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு :
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:
இந்த எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
எல்ஜி ஜி6 லைட் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.25.000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications