Home
Mobile

அசத்தலான எல்ஜி ஃபோல்டர் போன் 2 அறிமுகம்.! என்ன விலை?

எல்ஜி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறதுää அந்த வரிசையில் இப்போது எல்ஜி ஃபோல்டர் போன் 2 மாடலை கொரியாவில் அறிமுகம் செயதுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறததில் கிடைக்கும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.8-இன்ச் QVGA டிஸ்பிளே

இப்போ வெளிவந்த எல்ஜி ஃபோல்டர் போன் 2 ஆனது 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே வசதியும்,பின்பு 0.9-இன்ச் மோனோ டிஸ்பிளேவசதியும் கொண்டு வெளிவந்துள்ளது. இரண்டாவது டிஸ்பிளே சிக்னல் ஸ்டெரென்த்,பேட்டரி திறன், நேரம் போன்ற விவங்களைகாட்டுகிறது.

 127கிராம் எடை

இந்த சாதனம் 127கிராம் எடை கொண்டுள்ளது பின்பு,குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் இருமையாக இருக்கும் இந்த சாதனம்.

 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த எல்ஜி ஃபோல்டர் போன் 2 ஸ்மார்ட்

குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த எல்ஜி ஃபோல்டர் போன் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக 32ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

க 1.5 விநாடிகளுக்குள் மூன்று முறை

இந்த சாதனத்தின் பின்புறம் 2எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,அதனுடன் எஸ்ஒஸ்(SOS) கீ உள்ளது, இது பயனர்கள் முன்பே பதிவு செய்யப்பட்ட எண்ணை அழைக்க பயனர்களை அனுமதிக்கிறது. மூத்த குடிமக்கள் மற்றும் எளிமையான தொலைபேசிகளை விரும்பும் நபர்களுக்காக இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.5 விநாடிகளுக்குள் மூன்று முறை விரைவாக அழுத்துவதன் பதிவுசெய்யப்பட்ட எண்ணை அழைக்க பயனர்களை அனுமதிக்கும்.

 2 சாதனத்தில் ஒரு ஹாட்கீ

எல்ஜி ஃபோல்டர் போன் 2 சாதனத்தில் ஒரு ஹாட்கீ வசதியும் உள்ளது, இது பயனர்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட குரல் சேவையை வரவழைக்க அல்லது அழைப்பை பதிவு செய்யவும் அனுமதிக்கிறது.

1470எம்ஏஎச் பேட்டரி

மேலும் இந்த எல்ஜி ஃபோல்டர் போன் 2 சாதனத்தில் 1470எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

 198,000 வோன்

எல்ஜி ஃபோல்டர் 2 கொரியாவில் 198,000 வோன் (இந்திய மதிப்பில் ரூ.12,420)என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் கொரியாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Folder 2 Flip Phone launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X