Home
Mobile

எல்ஜி மற்றும் சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன்கள்: ஓர் அலசல் ஒப்பீடு

By Super

எல்ஜி மற்றும் சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன்கள்: ஓர் அலசல் ஒப்பீடு
எந்த துறையாக இருந்தாலும் கடுமையான முயற்சி அவசியம். ஆனால் அதைவிட முக்கியம் கடுமையான போட்டி. இந்த போட்டி இருந்தால், சிறந்த முன்னேற்றத்தை பெற முடியும். இப்படி கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கிறது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்.

இத்தகைய போட்டியை கொடுக்க புது ஸ்மார்ட்போன்களுடன் களமிறங்க உள்ளது எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனம். கனெக்ட் 4ஜி என்ற ஸ்மார்ட்போனை எல்ஜி நிறுவனமும், கேலக்ஸி 4ஜி என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனமும் அறிமுகம் செய்தள்ளது.

கனக்டு 4ஜி மற்றும் கேலக்ஸி அட்டெய்ன் 4ஜி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த இரண்டுமே சிடிஎம்ஏ தொழில் நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள். எல்ஜி கனக்டு 4ஜி ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியை கொண்டுள்ளது. இதனால் 480 X 840 திரை துல்லியத்தை கொடுக்கும். கேலக்ஸி அட்டெய்ன் 4ஜி ஸ்மார்ட்போன், எல்ஜி ஸ்மார்ட்போனைவிட சற்று குறைந்த திரையை கொண்டதாக இருக்கிறது. இதன் திரை 3.5 இஞ்ச் திரை, 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும்.

டியூவல் கேமரா வசதியை இந்த 2 ஸ்மார்ட்போன்களும் தரும். கனெக்ட் 4ஜி ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி 4ஜி அட்டெய்ன் ஸ்மார்ட்போனில் 3 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமாராவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் 3 மெகா பிக்ஸல் கேமரா லெட் ஃபிளாஷ் வசதியையும் கொடுக்கும். இந்த 2 ஸ்மார்ட்போனிலும் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற முடியும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் எக்ஸ்டர்னல் வசதியினையும் 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன்களின் மெமரி ஸ்லாட்டுகள் மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி கார்டு வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்கிறது.

எல்ஜி கனெக்ட் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி அட்டெய்ன் 4ஜி ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையும் வெளியானால் தான் எந்த மொபைலை மக்கள் விரும்புவார்கள் என்பது தெரிய வரும். இந்த 2 ஸ்மார்ட்போன்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X