குறைந்த விலையில் கலக்க வரும் எல்ஜி ஸ்மார்ட் போன்.! விலை எவ்வளவு தெரியுமா?
பல்வேறு நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், சந்தையில் விற்பனையில் லாபம் ஈட்டவும் தனது புதிய வடிலான போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்தியாவின் செல்போன் சந்தை பெரிய அளவில் இருப்பதால், வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்து தங்களது செல்போன்களை விற்பனை செய்து வருகின்றன. இன்றைய காலத்தில் நவீனமாகவும் அழகாவும் குறைந்த விலையில் உள்ள செல்போன்களை சந்தையில் விரும்பி வாங்கின்றனர்.

இதனால் பல்வேறு நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், சந்தையில் விற்பனையில் லாபம் ஈட்டவும் தனது புதிய வடிலான போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோல் எல்ஜி நிறுவனமும் இந்தியாவில் குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

எல்ஜி கேன்டி:
எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த போன் எல்ஜி கேன்டி என்று அழைக்கப்படும். இந்த ஸ்மார்ட் போன் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும்

5.0. இன்ச் டிஸ்பிளே:
எல்ஜி கேன்டி ஸ்மார்ட் போன் திரை 5.0 இன்ச் ஆகும். 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 294பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

8 இன்ச் பிரைமரி கேமரா:
புகைப்படங்கள் எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் புகைப்படங்கள் ஜிப் போல் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2500 எம்ஏஹெச் பேட்டரி:
எல்ஜி கேன்டி ஸ்மார்ட் போனுக்கு 2500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.

கிடைக்கும் நிறங்கள்:
இந்தியாவில் எல்ஜி கேன்டி ஸ்மார்ட் போன் சில்வர், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பேக் கவர்களை மாற்றிக் கொள்ளலாம். புதிய எல்ஜி கேன்டி ஸ்மார்ட் போன் விலை ரூ.6999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications