உயர்ந்த தொழில் நுட்பத்தில் புதிய எல்ஜி மொபைல்!

இந்த மொபைல் 2.3 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். எந்த திரையுமே எவ்வளவு திரை துல்லியத்தினை கொடுக்கும் என்பதும் முக்கியமான ஒன்று தான்.
அந்த வகையில் இந்த சி-199 மொபைலின் திரை 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இந்த மொபைலில் 8 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
இதில் உள்ள 2 மெகா பிக்ஸல் கேமரா 1600 X 1200 பிக்ஸல் சிறப்பான துல்லியத்தினை கொடுக்கும். இதனால் புகைப்படங்களும், வீடியோ ரெக்கார்டிங்கும் விரும்பிய வண்ணத்தில் கிடைக்கும். ஆனால் இந்த மொபைலில் செகன்டரி கேமரா கொடுக்கப்படவில்லை.
வைபை, புளூடூத், யூஎஸ்பி என்று பல தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும் இந்த மொபைலில் சிறப்பான இன்டர்நெட் சவுகரியங்களை பயன்படுத்த முடியும்.
475 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 7 மணி நேரம் 30 நிமிடங்கள் டாக் டைமினையும் வழங்கும் இந்த மொபைல் தொழில் நுட்ப வசதிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் 1,100 எம்ஏஎச் பேட்டரி வசதியினையும் கொடுக்கும்.
கறுப்பு மற்றும் சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் இந்த மொபைலின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications