Home
Mobile

சூப்பர் பட்ஜெட் பிரிவில் எல்ஜி அரிஸ்டோ 2: இந்தியாவில் அறிமுகமாகுமா.?

ஒருவேளை இந்திய சந்தையில் அரிஸ்டோ 2 அறிமுகமானால், அது சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனிற்கு நல்ல போட்டியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

By Muthuraj

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இன்று அதன் எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு புதிய வாரிசை அறிவித்துள்ளது, அதாவது எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக களமிறங்கியுள்ள இக்கருவி தற்போது அதன் அமெரிக்க விற்பனையை தொடங்கியுள்ளது.

சூப்பர் பட்ஜெட் பிரிவில் எல்ஜி அரிஸ்டோ 2: இந்தியாவில் அறிமுகமாகுமா.?

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் அரிஸ்டோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவில்லை என்பதால் எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனும் இந்திய விற்பனையை சந்திக்காது என்றே தோன்றுகிறது. அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் ஆனது எல்ஜி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் சுவாரசியமாக அது அசல் அரிஸ்டோவின் பிரதான அம்சங்களை கொண்டு சற்று மாறுபட்ட வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஒற்றை மாறுபாட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அமெரிக்க விலை நிர்ணயமானது 139 டாலர்கள் (சுமார் ரூ.8,900) ஆகும். அம்சங்களை பொறுத்தமட்டில், முன்னர் குறிப்பிட்டபடி, எல்ஜி அரிஸ்டோவுடன் ஒப்பிடும்போது ​​அரிஸ்டோ 2 ஆனது சற்று சிறப்பான முறையின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீக்கக்கூடிய பின்புற பேனல் உடன் வரும் இக்கருவியானது அதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றையும் கொண்டுள்ளது.

சிப்செட்

சிப்செட்

பெரும்பாலான பிற உற்பத்தியாளர்களைப் போல, எல்ஜி நிறுவனம் அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனில் முக அடையாளம் அங்கீகார தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது. 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ள எல்ஜி அரிஸ்டோ 2 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மெமரி

மெமரி

சேமிப்புத்துறையை பொறுத்தமட்டில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் சிறந்த பகுதியாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றும் உள்ளது. அதனை கொண்டு 32 ஜிபி வரையிலாக மெமரி விரிவாக்கத்தை நிகழ்த்தமுடியும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
கேமரா

கேமரா

4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி ப்ளாஷ் உடனான 13எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது. மறுகையில் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி முன்பக்க கேமரா ஒன்றையும் கொண்டுள்ளது.

இயக்கமுறைமை

இயக்கமுறைமை

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்கமுறைமையின் கீழ் இயங்கும் இக்கருவியானது, ஒரு 2410எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. நிறுவனத்தின்படி இது 17 மணி நேர பேச்சு நேரம் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு அல்லது மற்ற நாடுகளுக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.

நல்ல போட்டி

நல்ல போட்டி

ஒருவேளை இந்திய சந்தையில் அரிஸ்டோ 2 அறிமுகமானால், அது சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனிற்கு நல்ல போட்டியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பல எதிர்பார்க்கப்படும் மற்றும் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பு போன்ற அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
LG Aristo 2 With 4G VoLTE Support and Qualcomm Snapdragon 425 SoC Officially Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X