டியூவல் கேமராவுடன் ஆன்ட்ராய்டில் இயங்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்!

என்னவென்றால், இதில் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தினை பெற முடியும்.
இந்த 4.7 இஞ்ச் திரை அகன்றதாக மட்டும் அல்லாமல், இதன் துல்லியமும் சிறப்பான தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் நிச்சயம் தகவல்களையும் தெளிவாக பார்க்க முடியும்.
இந்த நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனின் திரைக்கு பாதுகாப்பு கவசமாக கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷனும் வழங்குப்படும். இதில் சிறப்பான கேமராவின் மூலம் 8 மெகா பிக்ஸலை பெற முடியும். இந்த கேமராவில் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்ற வசதிகளையும் பயன்படுத்தலாம். இதோடு 1.3 முகப்பு கேமராவையும் பயன்படுத்தலாம்.
இதில் இருக்கும் மற்ற தொழில் நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும். 8 ஜிபி மற்றும் 16 ஜிபி என்ற 2 விதமான மெமரி வெர்ஷன்களிலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் க்ரெய்ட் சிபியூ தொழில் நுட்பத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும்.
139 கிராம் எடை கொண்ட இந்த நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனை 2,100 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 15.3 மணி நேரம் டாக் டைம் மற்றும் 390 மணி நேரம் ஸ்டான்-பை டைம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.
மிக முக்கியமாக கூகுள் ஆன்ட்ராய்டு 4.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், என்எப்சி தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.


Click it and Unblock the Notifications