Home
Mobile

எல் வரிசையில் மற்றுமொரு புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

By Super

எல் வரிசையில் மற்றுமொரு புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
எல்-7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது எல்ஜி நிறுவனம். சமீபத்தில் தான் ஆப்டிமஸ் எல்-7 மற்றும் ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம், புதிதாக எல்-5 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இங்கிலாந்து, ஜெர்மனி, பிரெஞ்சு, ஆசியா ஆகிய நாடுகளில் அறிமுகம் ஆக உள்ளது இந்த புதிய எல்-5 ஸ்மார்ட்போன். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4.0 இஞ்ச் திரை வசதியினையும் வழங்கும்.

800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ-5 கார்டெக்ஸ் பிராசஸர் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். இதன் 4 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த எல்-5 ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.

4 ஜிபி இன்டர்னல் வசதியினை வழங்கும், இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த கேமரா லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பத்தினை கொண்டது.

இதில் சிறந்த புகைப்படமும், விடியோ ரெக்கார்டிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 1,500 எம்ஏஎச் பேட்டரியின் சிறப்பான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X