மிட்-ரேன்ஜ் விலையில் களமிறந்த்தும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் (அம்சங்கள்).!

கடந்த ஆண்டு வெளியான மாதிரிகளுடன் ஒப்பிடும்போது புதிய 2018-ஆம் ஆண்டின் கே8 மற்றும் கே10 ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் மாற்றங்களை இல்லை.

|

நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் எல்ஜி நிறுவனம் அதன் ஜி7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெளியிடவில்லை என்கிற போதிலும் கூட அதன் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் உட்பட மொத்தம் நான்கு மிட்-ரேன்ஜ் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

தென்கொரிய எலக்ட்ரானிக் நிறுவனமான எல்ஜியின் இந்த வெளியீட்டில், அதன் 2018 பதிப்புகளான மிட்-ரேன்ஜ் கே8 மற்றும் கே10 ஸ்மார்ட்போன்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும். கடந்த ஆண்டு வெளியான மாதிரிகளுடன் ஒப்பிடும்போது புதிய 2018-ஆம் ஆண்டின் கே8 மற்றும் கே10 ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் மாற்றங்களை இல்லை.

மேம்பட்ட கேமரா

மேம்பட்ட கேமரா

குறிப்பாக, தற்கால ஸ்மார்ட்போன்களின் நவநாகரீக 18: 9 திரை விகிதம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் சில நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சில புதிய அம்சங்களை காணமுடிகிறது. அதற்கு மாறாக எல்ஜி உயர் வேக ஆட்டோஃபோகஸ் மற்றும் சிறந்த குறைந்த ஒளியில் புகைப்படம் எடுத்தல், இரைச்சல் குறைப்பு போன்ற அம்சங்களை கொண்ட ஒரு மேம்பட்ட கேமரா அமைப்பை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.

எல்ஜி கே8 (2018) அம்சங்கள்

எல்ஜி கே8 (2018) அம்சங்கள்

இக்கருவி மெட்டல் யூ- ப்ரேம் உடனான ஒரு உலோக வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 1280 x 720 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் ஜோடியாக 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

ஆட்டோ ஷாட்

ஆட்டோ ஷாட்

மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு கொண்டுள்ள இக்கருவியின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. மேலும் இதன் கேமரா பயன்பாடு ஆட்டோ ஷாட், கெஸ்டர் (சைகை) ஷாட், செல்பீக்கான பிளாஷ் மற்றும் க்விக் ஷேர் போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது.
,

2500எம்ஏஎச் பேட்டரி

2500எம்ஏஎச் பேட்டரி

மேலும் இதன் கேமரா பயன்பாடானது, இரண்டு புத்தம் புதிய அம்சங்களையும் தன்னுள் இணைந்துள்ளது. அது டைமர் ஹெல்ப் மற்றும் ஃப்ளாஷ் ஜம்ப் ஷாட் ஆகியவைகளாகும். ஏரோரா பிளாக், மொராக்கோ ப்ளூ மற்றும் டெர்ரா கோல்ட் ஆகிய நிறங்களில் வெளியாகும் எல்ஜி கே8 (2018) ஆனது ஒரு 2500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியோட்டப்படும் இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும்.

2.5டி வளைந்த கண்ணாடி ஐபிஎஸ் டிஸ்பிளே

2.5டி வளைந்த கண்ணாடி ஐபிஎஸ் டிஸ்பிளே

பிரீமியம் மாறுபாடாக இருந்தாலும் கூட எல்ஜி கே10 (2018) ஆனது கே8 (2018) கொண்டுள்ள அதே உலோக யூனிபாடி வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளது. அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த சாதனம் ஒரு ஆக்டா-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு 5.3 அங்குல இன்-செல் டச் 2.5டி வளைந்த கண்ணாடி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஸ்மார்ட் ரியர் கீ

ஸ்மார்ட் ரியர் கீ

மேலும் இந்த சாதனம் ஒரு புதிய "ஸ்மார்ட் ரியர் கீ" அதாவது ஒரு ஆற்றல் பொத்தானை மற்றும் விரைவான ஷட்டர் அல்லது விரைவான ஸ்கிரீன்ஷாட் கேப்ட்சர் அம்சத்தினை கொண்டுள்ளது மற்றும் அது ஒரு கைரேகை ஸ்கேனராகவும் செயல்படும். எல்ஜி கே10 மொத்தம் மூன்று தரநிலைகளில் அதாவது கே10, கே10 பிளஸ், மற்றும் லோ-எண்ட் கே10 (மிகவும் சந்தேகத்திற்கு உரிய மாறுபாடு) வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு

2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு

அதில் கே10 மற்றும் கே10 ஆல்பா ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு கொண்டுவரும் மறுகையில் கே10 ப்ளஸ் ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு கொண்டு வருகிறது. மேலும் இந்த மூன்று மாதிரிகளும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவை வழங்கும்.

8எம்பி மற்றும் 5ம்பி

8எம்பி மற்றும் 5ம்பி

கே10 மற்றும் கே10 பிளஸ் ஆகிய இரு கருவிகளுமே எல்ஜி ஜி6 கொண்டுள்ள அதே 13எம்பி முதன்மை சென்சார் கொண்டிருக்கும். மேலும் இரண்டு சாதனங்களுக்கும் 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. கே10 ஆல்பாவைப் பொறுத்தவரை, பின்புற மற்றும் முன் கேமராக்கள் முறையே 8எம்பி மற்றும் 5ம்பி உள்ளது.

மூன்று நிறங்களில் கிடைக்கும்x

மூன்று நிறங்களில் கிடைக்கும்x

அனைத்து எல்ஜி கே10 மாடல்களுமே ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்கும். மற்றும் வைஃபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் 4ஜி எல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகளை வழங்குகின்றன. மேலும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் எரியூட்டப்படுகிறது. இந்த மாடலும் அரோரா பிளாக், மொராக்கோ ப்ளூ மற்றும் டெர்ரா கோல்ட் உட்பட மூன்று நிறங்களில் கிடைக்கும்.

How to check PF Balance in online (TAMIL)
மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018

எல்ஜி கே8 (2018) மற்றும் எல்ஜி கே10 (2018) ஆகிய இரு கருவிகளுமே அடுத்த வாரம் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்..

Best Mobiles in India

English summary
LG Announces Mid-Range K8 (2018) and K10 (2018) Smartphones With 4G LTE Support. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X