Home
Mobile

3 ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் களத்தில் இறக்கிய எல்ஜி

By Super
3 ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் களத்தில் இறக்கிய எல்ஜி
மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள சந்தை போட்டியை சமாளிக்கும் விதத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை அதிரடியாக களமிறக்கியுள்ளது எல்ஜி நிறுவனம், எல்ஜி டி-325,எல்ஜி பி-520 மற்றும் எல்ஜி டி-310ஐ என்ற மூன்று புதிய மாடல்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த மூன்று மாடல்களிலுமே கணினியின் வசதியும், எழுத்துக்களை டைப் செய்ய வசதியான நம்பர் பேட்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால், கணினி வசதியை இந்த புதியமாடல்களில் பெறமுடியும். மடிக்கணினியைப்போல இதைக் கைக்கணினி என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் வசதிகள் அதிகம். இதனால், விரும்புகிற விஷயத்தை தேடிஅலைய வேண்டாம்.விரும்பிய விஷயம் உங்களைத்தேடி வரும்.

இந்த எல்ஜி டி-310ஐ போன் டச் ஸ்கிரீன் இயக்குமுறையைக்கொண்டது. இந்த மாடல் 2.8 இஞ்ச் திரையைக் கொண்டுள்ளது.

2 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது காட்சிகளைத் துல்லியமாகக் படம் பிடிக்க உதவும்.

பேஸ்புக், டிவிட்டர்,ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் செல்லும் வசதியை டி-310ஐ மாடல் வழங்கும்.

3.5 மி.மீ வசதி உள்ளதால், எப்எம் ரேடியோக்களில் அன்றாட பாடல்களையும் உங்களால் ரசித்துக் கேட்க முடியும். இந்த புதிய மாடலில் 4ஜிபி வசதி உள்ளதால் அதிக தகவல்கள் சேகரிக்க உதவும். இந்திய சந்தையில் ரூ.5,999 என்ற பட்ஜெட் விலையில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

மூன்று மாடல்களுமே உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. எல்ஜி டி-325 மாடலில்,2.8 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது காட்சிகளை துல்லியமாகவும், தெளிவாகவும் காட்ட உதவுகிறது.

மற்றும் 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் வசதியை பெற்றுள்ளது. தவிர, அதிவேக இன்டர்நெட் வசதியை வைஃபை வழங்கும். அதிவகே நெட்வொர்க்கில் வீடியோ பைல்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும்.உங்கள் வசதிக்காக வின்டோஸ் லைவ்,யாஹு மெஸஞ்சர் என்று அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது ரூ.6,999 விலையில் கிடைக்கும்.

இதேபோன்று, எல்ஜி பி-520 டியூவல் சிம் பொருத்தும் வசதிகொண்ட ஸ்மார்ட்போனாக வந்துள்ளது. இது 2.8 இஞ்ச் தொடுதிரையும், ஒபெரா மினிபிரவுசர் மற்றும் 2.1 வெர்ஷன் புளூடூத் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.இந்த போன் ரூ.7,399 என்ற விலையில் எல்ஜி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X