சர்வதேச சந்தையில் புதிய அஸ்திரத்தை வீச எல்ஜி ரெடி!

எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் வியூ என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் களமிறக்கியது. அந்த எல்ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த புதிய போனை வரும் செப்டம்பரில் களமிறக்க இருக்கிறது எல்ஜி.
இந்த ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதன் 5 இன்ச் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இந்த போன் இயங்குவதால் இதன் இயங்கு வேகமும் சீராக இருக்கிறது. மேலும் இந்த போன் அப்க்ரேட் செய்யப்பட்ட குயிக்மெமோ மற்றும் நோட்புக் ஆகிய வசதிகளையும் அளிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் கொரியாவில் களமிறக்கப்பட்ட இந்த போன் இதுவரை 5,00,000 விற்பனையாகி இருக்கிறது. எனவே இதை உலகின் அனைத்து மார்க்கெட்டுகளிலும் களமிறக்க எல்ஜி துடித்துக் கொண்டிருக்கிறது.
வியூ ஸ்மார்ட்போனில் என்விடியா டேக்ரா 3 மொபைல் ப்ராசஸர், சூப்பர் 4 ப்ளஸ் 1 க்வாட் கோர் மற்றும் 5வது பேட்டரி சேவர் கோர் ஆகிய வசதிகளுடன் வருகிறது. அதனால் இந்த புதிய போன் பன்முக வசதிகளுடன் வரும் என்று நம்பலாம்.
கேமராவைப் பொருத்தவரை இந்த போன் 8.0 எம்பி பின்பக்கக் கேமரா மற்றும் 1.3எம்பி முகப்புக் கேமரா ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போன் 3ஜி நெட்வொர்க்கையும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த கேமராவில் 32ஜிபி சேமிப்பும் உண்டு.


Click it and Unblock the Notifications