17 மணிநேர டாக் டைம் கொடுக்கும் எல்ஜி ஏ-100 மொபைல்!

ஏ-100 மொபைலை மொபைல் உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது எல்ஜி நிறுவனம்.
68 கிராம் எடை கொண்ட இந்த மொபைலை வெகு எளிதாக கையாளலாம்.
இது 3.9 இஞ்ச் கொண்ட திரையை கொண்டது. டிஎப்டி திரை தொழில் நுட்பத்தையும் இந்த மொபைல் வழங்குகிறது.
எல்ஜி ஏ-100 மொபைலில் 950எம்ஏஎச் சிறந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் 17 மணி நேரம் டாக்டைம் மற்றும் 882 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.
இந்த மொபைலின் முக்கிய அம்சம் இதனுடைய பேட்டரி வசதி என்று கூறலாம்.
இந்த மொபைலின் மூலம் மொபைல் டிராக்கர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மொபைல் திருடுபோய் விட்டாலோ அல்லது தவறவிட்டாலோ கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
இதன் புளூடூத் வசதியின் மூலம் தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ள முடியும். கணினியில் உள்ள தகவல்களை
யூஎஸ்பி வசதியின் மூலம் மொபைலுக்கு எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும்.
இந்த எல்ஜி ஏ-100 மொபைல் ரூ.1,500 விலைக்கும் மிக குறைவாக கிடைக்கும். இது மலிவு விலை கொண்ட
மொபைல் ஆதலால் நிச்சயம் அனைவராலும் எளிதாக பெற்று பயனடைய முடியும்.


Click it and Unblock the Notifications