டைப்-சி போர்ட்; பேஸ் அன்லாக்; டூயல் கேம்; 3000mAh பேட்டரி; விலையோ ரூ.7,999.!

டேசன் 6ஏ எனப் பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட், 18: 9 டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமராக்கள் போன்ற பிரதான நவீன கால அம்சங்களை கொண்டிருகிறது, ஆனால் இதன் விலையோ வெறும் ரூ.7,999.!

|

லேபோன் எனப்படும் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆனது இன்று தனது "குழந்தை" பிராண்ட் ஆன டேசனின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. டேசன் 6ஏ எனப் பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட், 18: 9 டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமராக்கள் போன்ற பிரதான நவீன கால அம்சங்களை கொண்டிருகிறது, ஆனால் இதன் விலையோ வெறும் ரூ.7,999/- மட்டுமே.!

பேஸ் அன்லாக்; டூயல் கேம்;  3000mAh பேட்டரி; விலையோ ரூ.7,999.!

வாங்கிய தேதியிலிருந்து 100 நாட்களுக்குள் ஒரு முறை திரை மாற்ற உத்திரவாதம் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது, அதே சமயம் பேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது. க்வாட்கோர் ப்ராஸசர் மற்றும் ஒரு 3000mAh பேட்டரி ஆகியவற்றுடன் இணைந்து செய்லபடும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

இந்த டேசன் பிராண்ட் ஆனது ஸியோமியின் ரெட்மீ பிராண்ட் மற்றும் ஒப்போ நிறுவனத்தின் புதிய ரியல்மீ பிறந்த ஆகியவற்றிற்கு எதிராகை, இந்திய சந்தைக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதர அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் (18: 9) எச்டி ப்ளஸ் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி வடிவமைப்பு, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, மீடியாடெக் MT6737H சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவு கொண்டுள்ளது அதற்கு இதன் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் உதவும்.

ஒரு 3000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது உடன் இந்த ஸ்மார்ட்போன் பேஸ் அன்லாக்ட் செயல்பாட்டையும் வழங்குகிறது, இது சமீப காலமாக வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் பிரதான மற்றும் ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. கூடுதலாக, டேசன் 6ஏ-வின் கைரேகை ஸ்கேனர் ஆனது அழைப்பை எடுக்கவும் மற்றும் புகைப்படங்கள் எடுக்கவும் உதவும் என்பது கூடுதல் சிறப்பம்சம.!

பேஸ் அன்லாக்; டூயல் கேம்;  3000mAh பேட்டரி; விலையோ ரூ.7,999.!

கேமரா துறையை பொறுத்தமட்டில், டேசன் 6ஏ ஆனது ஒரு 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 0.3 எம்பி இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. போக்கே விளைவுகளை உண்டாக்கும் டெப்த் சென்சார் ஆனது இந்த விலை வரம்பில் கிடைப்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. உடன் 4ஜி LTE, வைஃபை 802.11 b / g / n, ப்ளூடூத், எஃப்எம் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப் சி போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lephone Launches Dazen 6A Smartphone With USB Type-C Port at Rs 7,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X