ஸ்னாப்டிராகன் 836 , 256 ஜிபி மெமரி உடன் வெளிவரும் லெனோவா ஸூக் இசெட்3 மேக்ஸ் .!
லெனோவா ஸூக் இசெட்3 மேக்ஸ் வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.!
சீனநாட்டு நிறுவனமான லெனோவா டெஸ்க்டாப், லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் டிவி போன்ற பல பொருட்களை இந்தியாவில் விற்ப்பனை செய்கிறது, மேலும் இந்நிறுவனம் 60க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இயங்குகிறது.
தற்போது லெனோவா நிறுவனம், ஸ்னாப்ட்ராகன் 836 மற்றும் 256ஜிபி மெமரி உடன் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, இந்த மாடலின் பெயர் லெனோவா ஸூக் இசெட்3 மேக்ஸ். இந்த ஸ்மார்ட்போன் மொபைல்
சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஜூலை மாதம் :
லெனோவா ஸூக் இசெட்3 மேக்ஸ் வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல விடயங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

தொழில்நுட்பம்:
இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு புதிய தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

சீன சமூக வலைதளம்:
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கிய குறிப்புகள் மற்றும் புகைப்படம் போன்றவை சீன சமூக வலைதளத்தில் காணப்பட்டது,இந்த ஸ்மார்ட்போனில் விளையாட்டு போன்ற பல்வேறு அம்சங்கள் மிக இருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 256ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் ஸ்னாப்டிராகன் 836 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications