சியோமி ஓரமாபோய் விளையாடு- 4கேமராக்களுடன் லெனோவோ இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த சாதனத்தின்; பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி செகன்டரி சென்சார், வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் நடைபெற்றி நிகழ்ச்சி ஒன்றில் லெனோவோ நிறுவனம் தனது லெனோவோ இசெட்6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த மாதம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே- கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
லெனோவோ இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.39-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எச்டிஆர் 10 ஆதரவு, பேஸ் அன்லாக் அம்சம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
லெனோவோ இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போனில்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த சாதனத்தின்; பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி செகன்டரி சென்சார், வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:
லெனோவோ இசெட்6 ப்ரோ சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியுவசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி:
லெனோவோ இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவோ இசெட்6 ப்ரோ விலை ரூ.30,000/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவோ இசெட்6 ப்ரோ விலை ரூ.31,000/-
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவோ இசெட்6 ப்ரோ விலை ரூ.39,000/-
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவோ இசெட்6 ப்ரோ விலை ரூ.51,000/-


Click it and Unblock the Notifications