Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று லேனோவா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா கே10, லெனோவா ஏ6 நோட் என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

 லெனோவா ஏ6 நோட்:

லெனோவா ஏ6 நோட்:

லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு, 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக நிலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

லெனோவா ஏ6 நோட் சிப்செட் வசதி:

லெனோவா ஏ6 நோட் சிப்செட் வசதி:

லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லேனோவா இசெட்6 ப்ரோ

லேனோவா இசெட்6 ப்ரோ

லேனோவா இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39-இன்ச் எப்எச்டி பிளஸ் யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

லேனோவா இசெட்6 ப்ரோ கேமரா அம்சம்

லேனோவா இசெட்6 ப்ரோ கேமரா அம்சம்

லேனோவா இசெட்6 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

லெனோவா கே10 நோட்

லெனோவா கே10 நோட்

லெனோவா கே10 நோட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.03-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா கே10 நோட் கேமரா அம்சம்

லெனோவா கே10 நோட் கேமரா அம்சம்

லெனோவா கே10 நோட் சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ்+8எம்பி டெலிலென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக 4050எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை:

அட்டகாசமான விலை:

லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே10 நோட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 மற்றும் 6ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே10 நோட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் லெனோவா இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. குறிப்பாக வரும் செப்டம்பர் 11-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Z6 Pro, Lenovo K10 Note and A6 Note launched in India sepcs and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X