Home
Mobile

பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.!

லேனோவா நிறுவனத்தின் லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் மாடல்கள் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று பிளிப்கார்ட் வழியே துவங்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லேனோவா இசெட்6 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவா ஏ6 நோட் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

லெனோவா ஏ6 நோட்

லெனோவா ஏ6 நோட்

லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு, 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக நிலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

லெனோவா ஏ6 நோட் சிப்செட் வசதி

லெனோவா ஏ6 நோட் சிப்செட் வசதி

லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லேனோவா இசெட்6 ப்ரோ

லேனோவா இசெட்6 ப்ரோ

லேனோவா இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39-இன்ச் எப்எச்டி பிளஸ் யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

லேனோவா இசெட்6 ப்ரோ கேமரா அம்சம்

லேனோவா இசெட்6 ப்ரோ கேமரா அம்சம்

லேனோவா இசெட்6 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Lenovo Z6 Pro, Lenovo A6 Note Sale in India via Flipkart and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X