வேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.!
லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் பொதுவாக ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் வடிவமைப்பில் வெளிவராது என லெனோவா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து லெனோவா நிறுவனம் கணினி மற்றும் மொபைல் போன்ற சாதனங்களில் புதிய முயற்சியை செயல்படுத்தி வருகிறது, அதன்படி லெனோவா நிறுவனம் லெனோவா இசெட்5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை தயார் செய்துவருகிறது, இந்நிலையில் அந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிட்ப்பட்டது, அதைதொடர்ந்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது லெனோவா இசெட்5 டீசர்.
வெளியிடப்பட்ட அந்த டீசரில் லெனோவா இசெட்5 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டீசரை லெனோவா நிறுவனத்தின் துணை தலைவர் சாங் செங் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளவந்துள்ளது.

10 லட்சம் புகைப்படங்கள்:
லெனோவா இசெட்5 ஸ்மார்ட்போன் மாடல் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வசதியுடன் வெளிவரும்போது, 10 லட்சம் புகைப்படங்கள்,
2000 ஹெச்டி திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்களை சேமிக்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம்:
இந்த லெனோவா இசெட்5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என லெனோவா நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் பெருமையை பெறும் லெனோவா இசெட்5 ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்கிரீன்-டு-பாடி:
மேலும் இந்த ஸ்மார்ட்போன் சுமார் 95மூ அதிகமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக முழு எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த லெனோவா இசெட்5 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஐபோன் எக்ஸ்:
லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் பொதுவாக ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் வடிவமைப்பில் வெளிவராது என லெனோவா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் ஆடியோ வைப்ரேஷன் மூலமாக டிரான்ஸ்மிட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


விலை:
இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு இந்திய சந்தையில் அதிக எதிபார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications