Home
Mobile

12ஜிபி ரேம் கொண்ட மிரட்டலான லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் 16எம்பி+24எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது.

சீனாவில் லெனோவா இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அந்நிறுவனம் புதிய மிரட்டலான லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி. மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் தான் உலகின் 12ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

12ஜிபி ரேம் கொண்ட மிரட்டலான லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி.  ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதி கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் வேகமாகவும், அருமையாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12ஜிபி ரேம் வெர்ஷனில் அதிகபட்சம் 50 செயலிகளை ஒரே நேரத்தில் திறக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் மாடல் 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோல்ட்
டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஷ் ஆதரவுடன
வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 855:

ஸ்னாப்டிராகன் 855:

இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இவற்றுள் இடமபெற்றுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் 16எம்பி+24எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது, பின்பு 16எம்பி+8எம்பி டூயல் செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விலை-பேட்டரி:

விலை-பேட்டரி:

லெனோவா இசெட்5 ப்ரோ ஜி.டி. சாதனத்தில் 3350எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


இந்திய மதிப்பில்:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.27,780/-

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.30,865/-


8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,985/-


12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.45,280/-

Best Mobiles in India

English summary
Lenovo Z5 Pro GT Edition launched as the first Snapdragon 855-powered smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X