வரப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ வரும்முன்பே ஓரங்கட்டும் லெனோவா.!
ஒரு புதிய லெனோவா ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல், ஸ்கெட்ச் வடிவத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு புதிய லெனோவா ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல், ஸ்கெட்ச் வடிவத்தில் வெளியாகியுள்ளது. அது மிகவும் நம்படமுடியாத அளவில், துளிக்கூட பெஸல்களே இல்லாத ஒரு வடிவமைப்பை வெளிப்படுத்தியது. பெஸல் என்றால் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவின் முனையில் இருக்கும் பகுதியாகும். பெஸல்களே இல்லை என்றால், கூறப்படும் இந்த புதிய லெனோவாஸ் ஸ்மார்ட்போனில் உடச்சக்கட்ட ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் இடம்பெறும் என்று அர்த்தம்.

இந்த தகவலை, நிறுவனத்தின் துணை தலைவைர் ஆன, சேங் செங் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது கூடுதல் சுவாரசியம். அந்த ஸ்மார்ட்போனின் பெயர் என்ன..? எம்மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை விரிவாக காண்போம்.

லெனோவா Z5 என அழைக்கப்படுவதாக உறுதிப்படுத்தபட்டுள்ளது.!
வெளியான தகவலை படி, அந்த ஸ்மார்ட்போன், லெனோவா Z5 என அழைக்கப்படுவதாக உறுதிப்படுத்தபட்டுள்ளது. விபோ தளம் வழியாக வெளியாகியுள்ள இந்த புகைப்படம் ஆனது, மிக உயர்ந்த ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் என்னவெனில் பக்கங்களில் மட்டுமின்றி மேல் மற்றும் கீழ் பகுதிகளிலும் கூட, பெஸல்லெஸ் வடிவமைப்பை காண முடிகிறது.

ஒரு ஹை எண்ட் ஸ்மார்ட்போனாக வெளியாகுமா.?
உலோக வடிவமைப்பை அல்லது ஒரு உலோகத் தகட்டைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படும் இந்தலெனோவா Z5 ஆனது, அதன் கீழ் விளிம்பில் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஒன்றையும் கொண்டுள்ளது. இந்த லெனோவா Z5, ஒரு ஹை எண்ட் ஸ்மார்ட்போனாக வெளியாகுமா என்பதில் உறுதி இல்லை. அதாவது, இந்த ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ்9, ஒன்ப்ளஸ் 6 மற்றும் மாமி மிக்ஸ் 2எஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் உடன் போட்டியிடுமா என்பதில் தெளிவு இல்லை.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி மூலம் இயங்கும்.!?
லெனோவா Z5-ன் வன்பொருள் அம்சங்கள் பற்றிய விவரங்கள் ஏதுமில்லை. ஆனால், இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், , இது கிட்டத்தட்ட அனைத்து உயர் இறுதியில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இது போட்டியிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

வருகிற ஜூன் 14 அன்று, அறிவிக்கப்படுமென்று ஊகங்கள் உள்ளன.!
இது குறைந்தது 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு, இரட்டை கேமரா அமைப்பு மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்களுடன் வெளி வர வாய்ப்பு உள்ளது. வருகிற ஜூன் 14 அன்று, அறிவிக்கப்படுமென்று ஊகங்கள் உள்ளன. இதன் 95 சதவிகிதத்திற்கும் மேலான ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் ஆனது, சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2எஸ், மி மிக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களின், விரிவான டிஸ்பிளேக்களை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.


லெனோவா Z5 ஸ்மார்ட்போன் ஆனது லெனோவா பிராண்ட்டின் கீழ் தொடங்கப்படும்.!
நிறுவனத்தின் துணை தலைவைர் ஆன, சேங் செங்கிடமிருந்து வெளியான அறிவிப்பில், இனி லெனோவா நிறுவனம், ZUK பிராண்டின் கீழ், மோட்டோரோலா தொலைபேசிகளை விற்காது. நிறுவனம் சமீபத்தில் சீனாவில் ZUK தொலைபேசிகளை விற்க முயன்றது, ஆனால் அது மக்களிடமிருந்து ஒரு நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஆக, புல் ஸ்க்ரீன் லெனோவா Z5 ஸ்மார்ட்போன் ஆனது லெனோவா பிராண்ட்டின் கீழ் தொடங்கப்படும்.


Click it and Unblock the Notifications