பட்ஜெட் விலையில் வெளியானது லெனோவாவின் "4TB மெமரி" ஸ்மார்ட்போன்.!

பின்னர் அந்த ஸ்மார்ட்போன் லெனோவாவின் Z5 ஸ்மார்ட்போன் தான் என்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

|

"டே.. கொஞ்சம் நஞ்சம் பேச்சாடா பேசுனீங்க.?" என்று லெனோவாவை நிறுவனத்தை கண்டபடி கழுவி ஊற்ற தோன்றுகிறது.

பட்ஜெட் விலையில் வெளியானது லெனோவாவின்

ஏனெனில் சமீபத்தில், லெனோவா நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனில் ஒரு நம்பமுடியாத 4டிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு திறன் இருக்கும், தாடை பகுதி மற்றும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ல் உள்ளது போன்றே நாட்ச் வடிவமைப்பு ஏதுமில்லாத புல் ஸ்க்ரீன் வடிவமைப்பு இடம்பெறுமென்று டீஸர்கள் வெளியானது.

ஒரு மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகியுள்ளது.!

ஒரு மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகியுள்ளது.!

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் கிளம்பின. பின்னர் அந்த ஸ்மார்ட்போன் லெனோவாவின் Z5 ஸ்மார்ட்போன் தான் என்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று சீனாவில் வெளியான லெனோவா Z5 ஸ்மார்ட்போனிலோ எதிர்பார்த்த எந்த அம்சமும் இடம் பெறவில்லை. கூறப்பட்ட லெனோவா Z5 ஆனது நிறுவனத்தின் ஒரு மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகியுள்ளது.

ஒரே ஒரு சந்தோஷம் என்னவெனில்.?

ஒரே ஒரு சந்தோஷம் என்னவெனில்.?

ஆம். ஒரு வழக்கமான 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, ஸ்னாப்டிராகன் 620 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் மிக முக்கியமாக, புல் ஸ்க்ரீன் வடிவமைப்பு இல்லாத ஒரு ஸ்மார்ட்போன்கஞ்களமிறங்கியுள்ளது. இப்படியொரு சாதாரணமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ஏன் சில முரட்டுத்தனமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகின என்பதில் தெளிவில்லை. ஒரே ஒரு சந்தோஷம் என்னவெனில் லெனோவாவின் இன்னொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது என்பது மட்டுமே.!

சரி என்ன விலை நிர்ணயம்.?

சரி என்ன விலை நிர்ணயம்.?

மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில்- பிளாக், ப்ளூ மற்றும் அரோரா - அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது சுமார் ரூ.13,500/-க்கும், மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது சுமார் ரூ.14,500/-க்கும் அறிமுகமாகியுள்ளது. இரண்டுமே விரைவில் சீனாவில் வாங்க கிடைக்கும், ஆனால் இந்திய வெளியீடு பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

கண்ணாடி உடல் மற்றும் அதன் பக்கங்களை சுற்றி ஒரு உலோக சட்டம் கொண்டுள்ள லெனோவா Z5 ஆனது 22.2 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.2 அங்குல முழு HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் 19: 9 என்கிற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் 6-ல் உள்ளது போன்றே மேல் பக்கத்தில் நாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ளது, உடன் 90% ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை வழங்குகிறது.

சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ-க்கு கடும் போட்டி.!

சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ-க்கு கடும் போட்டி.!

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ள லெனோவா Z5 ஆனது, சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ, அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான ZUI 4.0 உடன் இயங்குகிறது. சுவாரசியமான இது ஆண்ட்ராய்டு பி மேம்படுத்தல் வாக்குறுதியுடன் வருகிறது.

இரட்டை பின்புற கேமராக்கள்.!

இரட்டை பின்புற கேமராக்கள்.!

பின்புறத்தில், ஒரு 16 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 8 எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை பின்புற கேமராக்கள் உள்ளன. அடு 4K வீடியோ பதிவு செய்யும் ஆதரவை வழங்குகிறது மற்றும் சில ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 எம்பி கேமரா உள்ளது. ஒரு 3300mAh பேட்டரி மூலம் சக்தியோட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவு மற்றும் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஆகியவைகளுடன் அறிமுகமாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Z5 is Just Another Mid-Range Smartphone With a Notch and No 4TB Storage as Teased. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X