Home
Mobile

சியோமி மி 5 உடன் லெனோவா இசெட்2 ப்ளஸ் ஒரு ஒப்பீடு..!

By Muthuraj

ஒன் ப்ளஸ் 3 மற்றும் பல பிற பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது சியோமி மி5 ஒரு மூத்த கருவியாக திகழ்கிறது. இருப்பினும் சந்தையில் சமீபத்திய போட்டியாக லெனோவா இசெட் 2 ப்ளஸ் கருவியை சியோமி மி 5 சந்தகிகிறது. சியோமி மி 5 கருவியை விட ரூ.5,000/- என்ற அளவில் மலிவாக கிடைக்கும் இசெட்2 பிளஸ் கருவியானது மிக எளிதாக இப்போட்டியில் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியும். விலை தவிர்த்து பிற அம்சங்களின் அடிப்படையில் இரண்டிற்கும் இடையிலேயான ஒப்பீடு என்ன..?

அதை பற்றிய ஒரு தொகுப்பே இது..!

டிசைன் :

டிசைன் :

வடிவமைப்பு என்று வரும் போது மி5 முன்னேற்றம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கான்டர்டு பேக் பேனல் மற்றும் அதன் பிரீமியம் மெட்டல் பாடி ஆனது இசெட்2 ப்ளஸ் கருவியில் கிடையாது. லெனோவாவின் உள் வன்பொருள் வலிமையாக இருப்பினும் அதன் வடிவமைப்பு எளிமையானதாகவே இருக்கிறது.

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

சியோமி மி 5 : 5.15 இன்ச் (1080பி ரெசெல்யூஷன்) - இசெட்2 ப்ளஸ் : 5 இன்ச் டிஸ்ப்ளே (1080பி ரெசெல்யூஷன்). இசெட்2 ப்ளஸ் கருவியில் அதிக பிக்சல் டென்சிட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிஸ்ப்ளே என்று வரும் போது மி5 கருவி பெரியது.

கேமிரா :

கேமிரா :

சியோமி மி 5 : எப்/2.0 அப்பர்ஷெர், 4-ஆக்சிஸ் ஓஐஎஸ் அல்லது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டவுல் எல்இடி பிளாஷ் கொண்ட 16எம்பி பின்பக்க கேமிரா மற்றும் எப் / 2.0 அப்பர்ஷெர் கொண்ட 4 எம்பி முன்பக்க கேமிரா.
இசெட்2 ப்ளஸ் - பின்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ், எப்/2.2, 5பி லென்ஸ், ஐஎஸ்செல் சென்சார், பிடிஏஎப், சிஏஎப் டவுல் மோட் போகஸ், ஏஐஎஸ் கொண்ட 13எம்பி கேமிரா, முன்பக்க கேமிரா : 78.9 டிகிரி வைட் வியூவிங் ஆங்கிள் கொண்ட ப்ராண்ட்-பேஸிங் 8 எம்பி கேமிரா.

செயல்திறன் :

செயல்திறன் :

சியோமி மற்றும் லெனோவா ஆகிய இரண்டு கருவிகளும் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் பயன்படுத்தி இயங்குகிறது ஆனால் கிளாக் வேகங்களில் சற்று வித்தியாசம் கொண்டு வருகின்றன.

பேட்டரி :

பேட்டரி :

சியோமி மி 5 ஒரு நிலையான 3,000எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டும் லெனோவா இசெட் 2 ப்ளஸ் கருவியானது 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. ஆக பேட்டரி செயல்திறனில் லெனோவாவின் கை ஓங்குகிறது.

பிற அம்சங்கள் :

பிற அம்சங்கள் :

இரண்டு கருவிகளிலும் ஒரு கைரேகை ஸ்கேனர் அத்துடன் ஒரு யூஎஸ்பி டைப் சி போர்ட் கிடைக்கப் பெறுகிறது. உடன் இரண்டு சாதனங்களும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது உடன் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஆண்ட்ராய்டு 7.0 நவ்கட் அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை :

விலை :

சியோமி மி 5 : 32 ஜிபி சேமிப்பு + 3ஜிபி ரேம் கொண்ட கருவியானது ரூ.22,999/-க்கு கிடைக்கிறது. இசெட்2 ப்ளஸ் : 4ஜிபி ரேம் + 64ஜிபி வரையிலான சேமிப்பு கொண்ட கருவியானது ரூ.17,999/-க்கும், 32ஜிபி சேமிப்பு + 3ஜிபி ரேம் கொண்ட கருவியானது ரூ.19,999/-க்கும் கிடைக்கிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பட்ஜெட் விலையில் ஜியோ சப்போர்ட் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
வியக்க வைக்கும் சலுகைகளை வழங்கும் அமேசான் சாம்சங் விற்பனை திருவிழா.!

Best Mobiles in India

English summary
Lenovo Z2 Plus vs Xiaomi Mi 5. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X