Home
Mobile

எக்ஸ்டி1902-3 என்ற பெயரில் தரப்படுத்தல் வலைத்தளத்தில் சிக்கிய லெனோவா.!

சிங்கிள் ஸ்கொர் டெஸ்ட் மற்றும் மல்டி ஸ்கொர் டெஸ்ட் ஆகியவைகளில் மொத்தம் 4836 புள்ளிகளை பெற்றுள்ளது.

By Muthuraj

கடந்த ஆண்டு, லெனோவோ இந்தியாவில் ஹெலியோ எக்ஸ்15 சிப்செட் மூலம் இயங்கும் மோட்டோ எம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதன் வெற்றியை தொடர்ந்து இப்போது மோட்டோரோலா நிறுவனம் அதன் அடுத்த பதிப்பை மோட்டோ எம்2 என்ற பெயரில் களமிறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது .

எக்ஸ்டி1902-3 என்ற பெயரில் தரப்படுத்தல் வலைத்தளத்தில் சிக்கிய லெனோவா!

ஒரு அறிவிக்கப்படாத லெனோவோ எக்ஸ்டி1902-3 ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. மற்றும் அது சிங்கிள் ஸ்கொர் டெஸ்ட் மற்றும் மல்டி ஸ்கொர் டெஸ்ட் ஆகியவைகளில் மொத்தம் 4836 புள்ளிகளை பெற்றுள்ளது.

வெளியாகியுள்ள கீக்பென்ஞ் பட்டியலின்படி, இந்த லெனோவோ எக்ஸ்டி 1902-3 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 1.85 ஜிகாஹெர்ட்ஸ் டிக்கா-கோர் செயலி கொண்டுள்ளது. மேலும் இந்த கைபேசி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயக்க முறைமையை அடிப்படையாக கொண்டுள்ளது.

இருப்பினும், வெளியீட்டுத் தேதி மற்றும் இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் உண்மையான பெயரைப் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இல்லை. இப்போது ஸ்மார்ட்போன் தரவரிசை பட்டியல் வழியாக ஆன்லைனில் பரவி தொடங்கி இருப்பதால் நாம் இன்னும் குறிப்புகள் மற்றும் விவரங்களை விரைவில் மேற்பரப்பில் எதிர்பார்க்கலாம்.

எக்ஸ்டி1902-3 என்ற பெயரில் தரப்படுத்தல் வலைத்தளத்தில் சிக்கிய லெனோவா!

நினைவுபடுத்தும் வண்ணம், மோட்டோ எம் ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டு இரண்டு மாறுபாடுகள் வருகிறது - 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு, 3 ஜிபி ரேம் மற்றும் இரண்டுமே மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக மேலும் 128ஜிபி வரை விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

மோட்டோ எம் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் இது ஆக்டா-கோர் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் ஹெலியோ பி 15 சிபியூ உடன் இணைந்த மாலி- டி860 எம்பி 2 ஜிபியூ உடன் இணைந்துள்ளது.

இரட்டை எல்இடி பிளாஷ், பிடிஏ, 1 எம்எம் பிக்சல் அளவு, முழு எச்டி வீடியோ பதிவு, ஜியோ-டேக்கிங், டச் போகஸ், முகம் கண்டறிதல் மற்றும் ஆட்டோ-எச்டிஆர் ஆகிய அம்சங்களை கொண்ட 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

3050எம்ஏஎச் லி-அயன் பேட்டரி மூலம இயக்கப்படும் இந்த சாதனம் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும். இரட்டை சிம் 4ஜி, வோல்ட், ஜிபிஎஸ், ப்ளூடூத், என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி ஆகிய இணைப்பு ஆதவுகளை வழங்கும் இந்த சாதனம் அளவீட்டில் 151.35 x75.35x7.85மிமீ மற்றும் 163 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo XT1902-3 with Android Nougat and Helio X20 SoC spotted on Geekbench. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X