Home
Mobile

அசரடிக்கும் புதிய ஆப்ஷன்கள் கொண்ட ஒரு புது மொபைல் ஒரு பார்வை...!

இன்றைய உலகம் படுவேகமாக சென்று கொண்டிருக்கிறது எனலாம் அதற்கேற்ப டெக்னாலஜியிலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது சாதாரண மொபைல்களை பயன்படுத்திய நாம் இன்றைக்கு நம் அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன.

இன்றைக்கு பல அட்வான்ஸ்டு ஆப்ஷன்களுடன் ஸ்மார்ட் போன்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அந்தவகையில் லேட்டஸ்ட்டாக வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போடும் லினோவாவின் வைப் Z மொபைலை பற்றி தாங்க இப்போது பார்க்க போகிறோம்.

5.5 இன்ச் நீளம் இருக்கும் இந்த மொபைல் ஸ்கீரின்களில் ஸ்கேரட்ச் ஆகாத கொரில்லா கிளாஸூடன் வெளிவருதுங்க மற்றும் இந்த மொபைலில் 13 MP கேமரா கொண்டுள்ளது, இதன் பிரன்ட் கேமரா 5MP அளவிலும் உள்ளது இதனால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறலாம்.

அடுத்து இதில் 2.2GHz ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இது மிகவும் வேகமாக இயங்கக்கூடிய பிராஸஸர்களில் ஒன்றாகும். இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 இல் இயங்கக்கூடியதாகும் அதனுடன் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் மெகா ஹிட் வரவான கிட்கேட் அப்டேட்டும் இதில் கிடைக்கும்

அடுத்து இதில் மற்றொரு புதிய வசதி இதில் என்னவென்றால் 4G வசதியும் உள்ளது என்பது இந்த மொபைலின் சிறப்பு எனலாம்ங்க மேலும் 16GB இன்பில்டு மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் மெமரி கார்டு ஆப்ஷனும் இருக்குங்க இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும்.

இதோ அதில் இருக்கும் சில சிறப்பம்சங்களை பார்க்கலாம் இங்க வாங்க....

#1

#1

இதுலுள்ள ஸ்மார்ட் யூஸர்ஸ் ஆப்ஷன்ஸ் மிகவும் அருமையாக இருக்குதுங்க அதாவது இந்த மொபைலில் கால் வந்தால் பட்டனை அழுத்தி பேச வேண்டியதில்லை சும்மா மொபைலை காதில் வைத்தாலே போதும்ங்க அதுவே ஆட்டோ அட்டென்ட் ஆகிடும்ங்க

#2

#2

இந்த மொபைல் முழுவதும் எச்.டி மொபைல் ஆகும் இதன் பிரன்ட் கேமரா 5MP க்கு உள்ளது அத்துடன் இதில் 84° பிரன்ட் கேமரா திரும்பி உங்களது முகத்தை சரியாக படம் பிடிக்கும் திறன வாய்ந்தது.

மேலும் இதிலுள்ள பின் கேமரா 13MP திறன் கொண்டது இதன் கிளாரிட்டியும் அருமையாக உள்ளது

#3

#3

இந்த மொபைல் நமக்கு ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் உடன் நமக்கு கிடைக்கின்றது மேலும் இதில் மொபைல் கிராபிக்ஸ் சப்போர்ட்டும் மிகவும் அருமையாக இருக்கின்றதுங்க.

இந்த மொபைல் 3D மொபைல் கேம்களுக்கும் சப்போர்ட் என்பது கூடுதல் தகவல்ங்க.

#4

#4

5.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் 1980*1020 பிக்செல்ஸ் உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

அடுத்து இதனுடன் வரும் IPS(In plane switching) ஆப்ஷன் சூப்பருங்க அதாவது இந்த ஆப்ஷன் மூலம் இமெஜ்களை 180 டிகிரிக்கு திருப்பி பார்க்கலாம்ங்க

#5

#5

இதில்2.2GHz கோல்கோம் 800 ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது மேலும் இதன் மூலம் ஒரே நேரத்தில் மொபைலில் பல டாஸ்க்களை நாம் இயக்கலாம்.

#6

#6

இந்த DOit ஆப்ஸ் நீங்கள் வாங்கும் வைப் Z மொபைலுடனே இணைந்து வரும் இதன் மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து மற்ற ஆண்ட்ராய்டு மொபைலுக்கு டேட்டாக்களை மிக எளிதாக அனுப்பலாம்.

#7

#7

இந்த மொபைல் பயன்படுத்த ரொம்ப சூப்பருங்க அதாவது இதன் எடை வெறும் 147 கிராம் மட்டும் தாங்க மேலும் இதிலுள்ள கொரில்லா கிளாஸ் ஸ்கீரினிஸ் ஸ்கேரட்ச்சஸ் ஆகாமல் பாதுகாக்கிறது.

மேலும் இது மற்ற மொபைல்களில் இருப்பது போலவே டிஸ்பிளேக்கு கீழ் இருக்கும் மூன்று பட்டன்களுடன் மட்டுமே வெளிவருகிறது

#8

#8

இதிலுள்ள 3000mAh பேட்டரியானது மற்ற மொபைல்களின் பேட்டரியை விட அதிக நேரம் நம் மொபைலில் பேட்டரியை தாங்குகிறது

#9

#9

இதில் ஆப்ஸ்கள் மிகவும் வேகமாக இன்ஸ்டால் செய்யப்படுகின்றன மேலும் இந்த எச்.டி மொபைலில் கேம் விளையாடுவது புது அனுபவத்தை தருகிறது

#10

#10

மேலும் இந்த மொபைலில் மற்ற அனைத்து மொபைல்களிலும் இருப்பது போன்று 3G மட்டும் இல்லாமல் 4Gயும் இதனுடன் கிடைக்கின்றது என்பது இதன் மிகப் பெரிய சிறப்பம்சம்.

இந்த மொபைல் ஸ்டோர்களில் ரூ,35,999 கிடைக்கின்றது ஆனால் இந்த மொபைலின் விலையை தற்போது லினோவா குறைத்துள்ளது இதன தற்போதைய விலை ரூ.32,960 மட்டுமே.

மற்ற இடங்களில் இந்த மொபைலை வாங்குவதை விட லினோவாவின் ஸ்டோரானTheDoStore இதில் இந்த மொபைலை வாங்கினால் ரூ.2,039 மதிப்புள்ள மொபைலின் ஸ்மார்ட் டச் கவர் இலவசமாகும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X