இந்த மாதிரி ஆப்ஷனோட மொபைல் பாத்திருக்கிங்களா?

|

இன்றைக்கு மொபைல் சந்தையில் படுவேகமாக வளர்ந்து வருகிறது லினோவா, மேலும் மிகக் குறுகிய காலத்தில் இதன் வளர்ச்சி அனைத்து பெரும் மொபைல் கம்பெனிகளையும் கலக்கமடைய வைத்திருக்கிறது எனலாம்.

தற்போது மொபைல் உலகின் அனைவரது பார்வையும் சென்ற மாதம் லினோவா வெளியிட்டிருக்கும் புது மாடல் மொபைலான லினோவா வைப் Z பற்றி தான் இப்படி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் அந்த மொபைல் பற்றி பார்க்கலாமாங்க.

கொரில்லா கிளாஸ் உடன் வெளிவரும் இந்த மொபைல் 5.5 இன்ச் நீளத்துடன் இருக்கிறதுங்க இந்த மொபைலில் 13 MP கேமரா கொண்டுள்ளது பிரன்ட் கேமரா 5MP அளவிலும் இதில் உள்ளது இதனால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பின்பு இதில் 2.2GHz ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இது மிகவும் வேகமாக இயங்கக்கூடிய பிராஸஸர்களில் ஒன்றாகும்.

இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 இல் இயங்கக்கூடியதாகும் அதனுடன் கிட்கேட் அப்டேட்டும் இதில் கிடைக்கும் மேலும்,மற்றொரு புதிய வசதி இதில் என்னவென்றால் 4G வசதியும் உள்ளது இந்த மொபைலில் மேலும் மற்ற மொபைல்களில் இந்த லினோவா ஏன் தனியே தெரிகின்றது மற்றும் அப்படி இதில் என்னதான் ஆப்ஷன்கள் இருக்கின்றது என்று பார்ப்போம் வாங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதன் இன்டர்நெல் மெமரியை பொருத்த வரை 16GB உடன் வெளிவருகிறது இந்த மொபைல், மேலும் பேட்டரி திறன் 3000 mAh ஆகும்.இந்தயாவில்

#2

#2

5.5 இன்ச் நீளம் இருந்தாலும் மற்ற அனைத்து 5.5 இன்ச் மொபைல்களின் எடையை விட இதுதான் மிகவும் குறைவு அதாவது 145 கிராம் மட்டுமே இதன் எடை.

#3

#3

அடுத்து 2.2GHz ஸ்னேப்டிராகன் பிராஸஸர் இதனுடன் ஆண்ட்ராய்டு கிட்கேட் மற்றும் 2GB ரேம் என்றால் அதன் வேகத்தை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

#4

#4

இந்த மொபைல் முழுவதும் எச்.டி மொபைல் ஆகும் இதனால் இதன் கிளாரிட்டியும் அருமையாகவே இருக்கின்றதுங்க.மேலும் ஒரு விரலில் கிளிக் செய்தால் இதில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் இயக்கும் வண்ணம் உள்ளதுங்க இந்த மொபைல்.

#5

#5

பொதுவாக நாம் யாருக்காவது போன் செய்ய வேண்டும் என வைத்துக் கொள்வோம் அப்போது நாம் படுக்கையில் படுத்துள்ளோம் எனில் போனை நம் தலைக்கு மேலே பிடித்து நம்பரை டயல் செய்வது கடினம் தற்போது அதற்காகவே ஸ்மார்ட் டயலர் என்ற ஒரு ஆப்ஷன் இருக்குங்க.

#6

#6

அதாவது இந்த ஆப்ஷன் மூலம் நீங்க போனை எந்த பக்கம் சாய்த்தாலும் டயல் கீ பேட் அந்த பக்கம் சாயும்.

#7

#7

இதில் அன்லாக் பட்டன் மொபைலின் மேற்பகுதியில் இருக்கும் இதனால் உங்களுக்கு அடிக்கடி மொபைலின் டாப்பிற்கு சென்று அன்லாக் செய்ய முடியவில்லை எனில் இடது பக்கம் இருக்கும் வால்யூம் பட்டனை அழுத்தினாலே போதும்ங்க மொபைல் அன்லாக் ஆகிவிடும்.

#8

#8

அடுத்து இதில் உள்ள ஆப்ஷன் ஸ்மார்ட் கால் ஆப்ஷன் அதாவது யாராவது கால் செய்தால் நீங்கள் அட்டேன்ட் பட்டனை அமுக்கி காதில் வைத்து பேச தேவையில்லை போன் வந்தால் போனை எடுத்து காதில் வைத்தாலே போதும் கால் அட்டேன்ட் ஆகிவிடும்.

#9

#9

இதில் உள்ள "பிக்ஸல் ஷார்ப்னஸ்" ஆப்ஷனும் 13MP கேமரா கிளாரிட்டி மிகவும் அருமையாக இருக்கின்றது எனலாம் இதன் பிக்சல் தரம் 4128 x 3096 ஆகும்.

#10

#10

5MP உடைய பிரன்ட் கேமராவானது 84° அளவுக்கு ஆட்டோ போகஸ் கொண்டுள்ளது இதன் மூலம் நாம் நம்மை எடுக்கும் படங்கள் அருமையாக வரும்.

#11

#11

நாம் படம் எடுத்து முடித்தவுடனே நாமே பேஸ்புக், டவிட்டரில் அப்டேட் செய்ய தேவையில்லை அதுவே ஆட்டோமேட்டிக்காக பேஸ்புக்கில் அப்டேட் செய்துவிடும் அதற்கும் செட்டிங் இருக்கிறது இதில்.

#12

#12

3000 mAh திறன் கொண்ட பேட்டரி இருப்பதால் இதில் 3Gயை மட்டும் தொடர்ச்சியாக 15 மணி நேரம் பயன்படுத்தலாம் நாம்.

#13

#13

இத்தனை வசதிகளுடன் வெளிவந்திருக்கும் இந்த மொபைல் நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் நல்ல இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது எனலாம்.இதன் விலை ரூ.35,999 ஆக லினோவா நிறுவனம் தீர்மானித்துள்ளது இதனுடன் ரூ.2,039 விலையுள்ள ஸ்மார்ட் டச் கவரை இலவசமாக தருவதாகவும் லினோவா கூறியுள்ளது.
மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X