வெளியானது-'லெனோவா வைப் பி'..!
லெனோவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன 'லெனோவா வைப் பி' யானது வெளியிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த எம்டபுள்யூசி மாநாட்டில் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பினுக்கு ஏற்ற வகையினில்,எல்லா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் சந்தையில் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் விடுகிறவகையிலும்,தமது சந்தை மதிப்பினை தக்கவைத்துக்கொள்கிற வகையிலும் பல புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை வெளியிட்டன.
அவ்வாறு வெளியிடப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் ஆச்சரியத்துடன் இருக்கையிலே லெனோவா நிறுவனம் தமது புதிய தயாரிப்பான லெனோவா வைப் பி யினை வெளியிட்டுள்ளது.
அதன் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் கீழே..

லெனோவா வைப் பி:
லெனோவா நிறுவனமானது தமது தரமான தயாரிப்புகள் மற்றும் எல்லோரும் வாங்கி பயன்படுத்திடக்கூடிய அளவிலான விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் பலவற்றினைத் தயாரித்து வெளியிட்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் தமக்கென தனியானதொரு இடத்தினைப் பெற்றுள்ளது.இதுவே இப்போது லெனோவா வைப் பி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

அம்சங்கள்:
லெனோவா வைப் பி ஸ்மார்ட்போன் ஆனது 4.5 இன்ச் WQVGA,1 ஜிபி ரேம் ,குவாட் கோர் மீடியாடெக் MT6735M ப்ரோசஸர்,ஆண்ட்ராய்டு 6 மார்ஷ்மல்லோவ்,4ஜி எல்டிஇ,டூயல் சிம்,ப்ளூடூத் 4.2,வைஃபை 802/11/b/g/n உள்ளிட்ட அம்சங்களைப் பெற்றுள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா:
லெனோவா வைப் பி யானது 8ஜி பி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,32 ஜிபி எக்ஸ்பேண்டபிள் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.5 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி முன்புற கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி:
லெனோவா வைப் பி யானது கழற்றக்கூடிய வகையிலான 2000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.11.3 மணி நேரம் இதன் மூலமாக வாய்ஸ் கால் பேசலாம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

விலை மற்றும் நிறம்:
விலையைப் பொறுத்தமட்டில் லெனோவா வைப் பி யானது ரூபாய்.5799க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மேட் ப்ளாக் மற்றும் மேட் வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.தற்போது மும்பையில் மட்டும் விற்பனையாகிக் கொண்டிருக்கிற இந்த ஸ்மார்ட்போன் விரைவில் நாடு முழுமையிலும் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ இசட்(2017).!


Click it and Unblock the Notifications