Home
Mobile

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லயே.. Foldable போன்களை ஓரங்கட்டும் Bending ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்?

ஆச்சரியப்படும் விதமாக ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் (Foldable Smartphones), அதாவது மடிக்கக்கூடிய அல்லது மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இப்போது பொதுவான விஷயமாகி விட்டன. ஒரு காலத்தில் கான்செப்ட்களிலும், கான்செப்ட் போன்களாகவும் (Concept Phones) மட்டுமே காணப்பட்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் இப்போது மிகவும் சஜகமாகி விட்டன.

எந்த அளவிற்கு சகஜமாகி விட்டதென்றால், கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளுமே தங்களது சொந்த ஃபோல்ட் அல்லது ஃபிளிப் போன்களில் வேலை செய்கின்றன. கடந்த ஆண்டுகளில் அறிமுகமான சாம்சங் கேலக்சி இஸட் ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் சீரீஸ் போன்களும், சமீபத்தில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப், கூகுள் பிக்சல் ஃபோல்ட்,ஒன்பிளஸ் ஓப்பன் போன்ற ஸ்மார்ட்போன்களே இதற்கு சாட்சி!

Foldable போன்களை ஓரங்கட்டும் Bending ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்?

இருப்பினும் ஃபோல்டபிள் போன் கான்செப்ட்களில் (Foldable Phone Concepts) நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு டிசைன், இன்னும் நுகர்வோர் சந்தைக்கு வரவே இல்லை, அது பென்டிங் ஸ்மார்ட்போன்கள் (Bending Smartphones) ஆகும். அதாவது வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இதுவும் கூடிய விரைவில் அனைவரது கைக்கும் வந்துவிடும் என்பது போல் தெரிகிறது. மோட்டோரோலா நிறுவனம் தனது சமீபத்திய கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளது. டக்கென்று பார்க்கும் போது, மிகப்பெரிய டிஸ்பிளே கொண்ட ஒரு பெரிய ஸ்மார்ட் வாட்ச் போல காட்சியளிக்கும், இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலாவின் புதிய கான்செப்ட் பென்டிங் ஸ்மார்ட்போன் ஆகும்.

Foldable போன்களை ஓரங்கட்டும் Bending ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்?

லெனோவா டெக் வோர்ல்ட் 2023 (Lenovo Tech World 2023) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மோட்டோரோலாவின் கான்செப்ட் பென்டிங் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டெக் வோர்ல்ட் நிகழ்வில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட பென்டிங் வ்ரிஸ்ட் ஸ்மார்ட்போனின் (Bending Wrist Smartphone) லேட்டஸ்ட் ப்ரோடோடைப் ஆகும்.

2016 ஆம் ஆண்டிற்கு பிறகு மோட்டோரோலாவின் இந்த கான்செப்ட் பென்டிங் ஸ்மார்ட்போன் பற்றி எந்த பேச்சும் அடிபடவில்லை, இது பெரும்பாலும் மறைதிரைக்கு உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், சுமார் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இது காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது; கூடவே இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பென்டிங் ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி (FHD+ pOLED) டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. வளைய கூடிய தன்மை கொண்ட இந்த டிஸ்பிளேவை தட்டையாக மாற்றினால், இது 6.9-இன்ச் பேனலாக நீளும் என்றும் மோட்டோரோலா குறிப்பிடுகிறது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனை செல்ஃப்-ஸ்டேண்டிங் பொஷிஷனிலும் (Self-standing position) வைக்கலாம். இந்த பொஷிஷனில் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது 4.6-இன்ச் அளவுடையதாக சுருக்கப்படும். இது ஒரு பென்டிங் ஸ்மார்ட்போன் என்பதால், இதை உங்கள் மணிக்கட்டில் சுற்றி கொள்ளலாம்.

இது எப்போது விற்பனைக்கு வரும்? மோட்டோரோலாவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கான்செப்ட் பென்டிங் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு முன்மாதிரி மட்டுமே ஆகும். அதாவது இது இன்னும் உற்பத்தி நிலைக்கு வரவில்லை. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்து சுமார் 5 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் கூட, பென்டிங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக, குறைந்தபட்சம் இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும்.

Foldable போன்களை ஓரங்கட்டும் Bending ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்?

இந்தியாவில் வாங்க கிடைக்கும் சில பிரபலமான ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் போன்களை பொறுத்தவரை, ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போன் (Oppo Find N3 Flip Phone) ஆனது ரூ.94,999 க்கும், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) ஸ்மார்ட்போன் ரூ.154999 க்கும், மோட்டோரோலா ரேஸர் 40 (Motorola Razr 40) மாடல் ரூ.49,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

மிகவும் சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) அறிமுகமானது. இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் ரூ.1,39,999 ஆகும். இதேபோல கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy: https://news.lenovo.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tech World 2023 Motorola Showcased Its Concept Bending Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X