Home
Mobile

ரெட்மீ நோட் 5 காலி; டூயல் கேம் உடன் ரூ.9990/-க்கு லெனோவா எஸ்5 அறிமுகம்.!

இக்கருவி ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது, இது ஒரு நாள் முழுவதுமான பணிகளுக்கு போதுமானதாக இருக்கும்.

By Muthuraj

லெனோவா நிறுவனத்தின் "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட" எஸ்5 ஸ்மார்ட்போன் ஆனது இன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலைக்கு ஏற்ற நேர்மையான அம்சங்களை கொண்டுள்ள இக்கருவி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை குறிவைக்கும் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனிற்கு கடுமையான போட்டியை வழங்குமென்பதில் சந்தேகமில்லை.

லெனோவா எஸ்5 ஆனது, முன்னர் வெளியான வதந்திகளை போலல்லாமல் (6000எம்ஏஎச் பேட்டரி) ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டே சக்தியூட்டப்படுகின்றது. இக்கருவி ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது, இது ஒரு நாள் முழுவதுமான பணிகளுக்கு போதுமானதாக இருக்கும்.

5.7 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

5.7 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

லெனோவா எஸ்5 ஆனது இந்தியாவில் வெளியான சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை போன்றே அம்சங்களை கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 2160 × 1080 பிக்சல்கள் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட ஒரு 5.7 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3 ஜிபி / 4ஜிபி ரேம் உடன் இணைந்த 32ஜிபி / 64 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆகிய சேமிப்பு மாதிரிகளில் வெளியாகியுள்ளது.

நிகழ்நேர பியூடிப்பை

நிகழ்நேர பியூடிப்பை

ஒவ்வொரு மற்ற மொபைல் உற்பத்தியாளர்களைப் போலவே, லெனோவா நிறுவனமும், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கேமரா தொழில்நுட்பத்தில் நுழைகிறது. லெனோவா எஸ்5 ஒரு ஒழுக்கமான 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது, மேலும் இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நிகழ்நேர பியூடிப்பை விளைவை ஏற்படுத்தும் திறனும் கொண்டுள்ளது.

இரட்டை 13எம்பி சென்சார்

இரட்டை 13எம்பி சென்சார்

பின்பக்கத்தை பொறுத்தமட்டில், இரட்டை 13எம்பி சென்சார்களை கொண்டுள்ளது. அதாவது, எப் / 2.2 துளை கொண்ட ஒரு நிலையான ஆர்பிஜி சென்சார் மற்றும் ஒரு மோனோக்ரோம் சென்சார் கொண்டுள்ளது. ஒரு எல்இடி ஃப்ளாஷ் ஆதரவோடு வரும் இதன் கேமராவில் போர்ட்ரேட் பயன்முறையும் உள்ளதென்பது சிறப்பம்சம். ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இசெட்யூஐ 3.7 ரோம் (பெட்டிக்கு வெளியே) இயங்கும் இக்கருவி இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2 மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் அடங்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
மிட்நைட் பிளாக் அண்ட் ஃப்ளேம் ரெட்

மிட்நைட் பிளாக் அண்ட் ஃப்ளேம் ரெட்

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், லெனோவா எஸ்5 ஸ்மாட்ர்ட்போனின் 3ஜிபி ரேம் + 32 ஜிபி .ஆனது 999 யுவானுக்கும் (சுமார் ரூ.9990), 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஆனது 1199 யுவானுக்கும் (சுமார் ரூ.11,900) மற்றும் இறுதியாக 4ஜிபி ரேம் + 128 ஜிபி மாதிரியானது 1499 யுவானுக்கும் (சுமார் ரூ. 15,400) விற்பனையாகவுள்ளது. இந்த சாதனம் மிட்நைட் பிளாக் அண்ட் ஃப்ளேம் ரெட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Lenovo S5 With Snapdragon 625 SoC, 3000mAh Battery and Android Oreo Officially Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X