6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளியாகும் லெனோவா ஸ்மார்ட்போன்.!

லெனோவா நிறுவனமானது வருகிற மார்ச் 20-ஆம் தேதியன்று, அதன் முரட்டுத்தனமான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

|

லெனோவா நிறுவனமானது வருகிற மார்ச் 20-ஆம் தேதியன்று, அதன் முரட்டுத்தனமான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

லெனோவா எஸ்5 என்கிற பெயர் கொண்டுள்ள அந்த கருவியின் டீஸர் ஒன்று வெளியான பின்னரே அது முரட்டுத்தனமான ஒரு ஸ்மார்ட்போன் என்ற விடயம் தெரியவந்துள்ளது. அதாவது லெனோவா எஸ்5 ஆனது ஒரு 6000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

மெலிதான உடல்

மெலிதான உடல்

ஒரு பெரிய அளவிலான பேட்டரி கொண்டிருந்தாலும் கூட இக்கருவி ஒரு மெலிதான உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது. முதலில் சீனாவில் அறிமுகமாகும் இக்கருவி, பின்னர் இந்திய சந்தைக்கும் வரவுள்ளது.

இசெட்யூஐ

இசெட்யூஐ

வெளியாகியுள்ள லெனோவா எஸ்5 ஸ்மார்ட்போன் பற்றிய புகைப்படமானது, இக்கருவி ஒரு கண்ணாடி பிற்புறத்தையும், பெட்டிக்கு வெளியே இசெட்யூஐ (ZUI) கொண்டும் இயங்கும் என்பதை உறுதி செய்துள்ளன.

5100எம்ஏஎச்

5100எம்ஏஎச்

லெனோவா நிறுவனத்திடம் இருந்து கடந்த காலத்தில் வெளியான பெரிய அளவிலான பேட்டரி லெனோவா பி2 ஸ்மார்ட்போனின் பேட்டரி தான் என்பதும், அது 5100எம்ஏஎச் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெனோவா வைப் எஸ்1

லெனோவா வைப் எஸ்1

லெனோவா எஸ்5 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2015-ல் வெளியிடப்பட்ட லெனோவா வைப் எஸ்1 ஸ்மார்ட்போனின் அப்டேடட் ஸ்மார்ட்போன் ஆகும். வைப் எஸ்1 ஆனது இரட்டை செல்பீ கேமரா கொண்ட சில சாதனங்களில் ஒன்றாக இருந்தது.

அழகிய வடிவமைப்பு மற்றும் சிறிய வடிவம்

அழகிய வடிவமைப்பு மற்றும் சிறிய வடிவம்

அதன் அழகிய வடிவமைப்பு மற்றும் சிறிய வடிவம் காரணியாக மிகவும் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்றதொரு வெற்றியை லெனோவா எஸ்5 ஸ்மார்ட்போனும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
இனி பி தொடர் கருவிகளில்

இனி பி தொடர் கருவிகளில்

உடன், இனி லெனோவா நிறுவனத்தின் பி தொடர் கருவிகளில் பாரிய பேட்டரிகளையும் நாம் எதிர்நோக்கலாம். மேலும் பல விமர்சனம், அறிமுகம் மற்றும் அம்சங்கள் பற்றிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Lenovo S5 Smartphone With 6000mAh Battery Launching on March 20. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X