Home
Mobile

போட்டியாளர்களை 'லெஃப்ட் & ரைட்' வாங்கப்போகும் லெனோவா ப்ஹாப் 2.!

இந்தியாவில் அறிமுகமான லெனோவா ப்ஹாப் 2 கருவியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள்.

By Muthuraj

லெனோவா நிறுவனத்தின் ப்ஹாப் 2 கருவியானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்திய சந்தையில் கிடைக்கும். கன்மெட்டல் க்ரே மற்றும் காம்பைன் கோல்ட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த கருவியை முன்னர் அறிவித்தது போலவே ப்ளிப்கார்ட் ஆன்லைன் வலைத்தளத்தின் வழியாகவும் வாங்கலாம்.

6.4-அங்குல டிஸ்ப்ளே மற்றும் 4050எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி தான் இக்கருவியில் முதலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ஆகும். மேலும் இக்கருவியின் விலை மற்றும் லெனோவா ப்ஹாப் 2 உள்ளடக்கியுள்ள பிற அம்சங்களின் விவரங்கள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

மேம்படுத்தப்பட்ட பதிப்பு

மேம்படுத்தப்பட்ட பதிப்பு

முதலில் லெனோவா ப்ஹாப் 2 கருவியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ப்ஹாப் 2 பிளஸ் கருவியானது ரூ.14,999/- என்ற விலைக்கு கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

லெனோவா ப்ஹாப் 2 கருவி ஒரு எச்டி (720x1280 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்க ப்ஹாப் 2 பிளஸ் கருவியோ ஒரு முழு எச்டி (1920x1080 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கூடுதலாக, லெனோவா ப்ஹாப் 2 கருவியில் இடம் பெறாத கைரேகை சென்சார் ப்ஹாப் 2 பிளஸ் கருவியில் உள்ளது.

செயலி, மெமரி

செயலி, மெமரி

6.4 அங்குல எச்டி டிஸ்ப்ளே மற்றும் 4050எம்ஏஎச் பேட்டரி உடன் இணைந்து, புதிய லெனோவா ப்ஹாப் 2 கருவியில் 3ஜிபி ரேம் இணைந்த ஒரு 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி8735 செயலி உள்ளது. மெமரி துறையில் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் மற்றும் மைக்ரோ அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவுபடுத்தும் அம்சம் ஆகியவைகளும் இடம் பெறுகின்றன.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் லெனோவா ப்ஹாப் 2 கருவியில எல்இடி ப்ளாஷ் மற்றும் பிடிஏஎப் (PDAF) கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் ஒரு 85 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமிரா உள்ளது.

ஆகுமென்டட் ரியாலிட்டி

ஆகுமென்டட் ரியாலிட்டி

மேலும் லெனோவா ப்ஹாப் 2 கருவியானது மிகை யதார்த்த (ஆகுமென்டட் ரியாலிட்டி) எப்பெக்ட்தனை கேமரா ஆப் மற்றும் கைபேசியில் 3 ஆடியோ மைக்ஸ் கொண்டும், நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிற அம்சங்கள்

பிற அம்சங்கள்

- விலை ரூ.11,999/-
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
- டுவல் ஸ்லாட் (இரண்டு மைக்ரோ சிம்)
- 175x88.5x9.6எம்எம் அளவீடுகள் மற்றும் 225 கிராம் எடை
- இணைப்பு விருப்பங்கள் : 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.0, மற்றும் ஜிபிஎஸ்

மேலும் படிக்க

மேலும் படிக்க

அற்புதமான பட்ஜெட் விலையில் இன்று முதல் லெனோவா கே6 பவர், ப்ளிப்கார்டில்.!

Best Mobiles in India

English summary
Lenovo Phab 2 With 6.4-inch Display, 4050mAh Battery Launched in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X