உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் - இந்தியாவில் அறிமுகம்.!

|

உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் ஆன லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ கருவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இந்த சீன நிறுவனம் நாட்டில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் விவரங்களை அறிவித்தது. ப்ஹாப் 2 புரோ மொபைல் கருவிதான் மொபைல் கருவிகளில் வேலை செய்யும் மெஷின் விஷன் கொண்ட கூகிள் டேங்கோ அணியின் முதல் வணிக தயாரிப்பு ஆகும், உடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்க கண்காணிப்பு, ஆழம் சார்ந்த கருத்து மற்றும் பகுதி கற்றல் ஆகியவைகளை செயல்படுத்தும் ஒரு கேமரா மற்றும் சென்சார் அமைப்பை தாங்கியுள்ளது.

இது அனைத்தும் இண்டோர் நேவிகேஷன், தேடல், மற்றும் கேம்ஸ் ஆகியவைகளில் மிகை யதார்த்த (ஏஐ) பயன்பாடுகளை கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. மேலும் இக்கருவியின் விலை, அம்சங்கள் போன்ற விரிவான தகவல்கள் இதோ.!

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

அம்சங்கள் அடிப்படையில் லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ கருவியானது ஒரு 6.4-அங்குல க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது உடன் மொத்தம் நான்கு கேமராக்களையும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

இக்கருவி ஒரு 8 மெகாபிக்சல் முன் பக்க கேமரா, 16 மெகாபிக்சல் பின்புற ஆர்ஜிபி கேமரா மற்றும் இமேஜர், எமிட்டர் கொண்ட டெப்த் சென்சிங் அகச்சிவப்பு கேமரா மற்றும் ஒரு இயக்க கண்காணிப்பு கேமரா தாங்கியுள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

டாங்கோவிற்காக ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஓசி உடன் 4ஜிபி ரேம் இணைந்து இயக்கப்படுகிறது. 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட இக்கருவி 128ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீட்டிக்கும் ஆதரவும் அளிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

கேம்பைன் கோல்ட் நிறத்தில் கிடைக்கும் இக்கருவி இரட்டை சிம் ஆதரவு சாதனமாகும், இது இரண்டு நானோ சிம்களை ஆதரிக்கிறது. மற்றும் 15 மணி நேர பேட்டரி ஆயுள் வழங்கும், பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 4050எம்ஏஎச் பேட்டரி தாங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

டால்பி ஆடியோ 5.1 கேப்சர் தொழில்நுட்பம் தவிர்த்து டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட இதன் ஸ்பீக்கர்கள் 3தி ஒலி பதிவு நிகழ்த்தும். பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 179.8x88.5x10.7மிமீ மற்றும் 259 கிராம் எடையுடையது.

விலை

விலை

ரூ.29,990/- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இக்கருவி இன்று முதல் (வெள்ளி) ப்ளிப்கார்ட் தலத்தில் பிரத்தியேகமாக விற்கப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenovo, Lenovo Phab 2 Pro, Tango Smartphone, Lenovo Tango Launched in India, Smartphoen, Specs, Technology, News,

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X