5100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட லெனோவா பி2 - விலை & அம்சங்கள் என்ன.?
"பேட்டரி பற்றிய பயமில்லாமல் உங்கள் பயணங்களை கையாளுங்கள் #லெனோவாபி2 #பவர்ஹவுஸ் விரைவில்" என டீசர் ஒன்றை வெளியிட்டதை போலவே பி2 கருவி இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.
லெனோவா நிறுவனம் ஒரு முழுமையான பேட்டரி திறன் கவனம் செலுத்தப்பட்ட அதன் பி2 கருவியை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. லெனோவா நிறுவனம் இக்கருவியை முதலில் ஐஎஎப்ஏ2016-ல் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவி இன்று இந்திய நேரப்படி 12:30 மணியளவில் நாட்டில் வெளியிடப்படும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக விற்பனையையும் செய்யப்படும். சமீபத்தில் லெனோவா அதன் உத்தியோகபூர்வ ட்விட்டரில் "பேட்டரி பற்றிய பயமில்லாமல் உங்கள் பயணங்களை கையாளுங்கள் #லெனோவாபி2 #பவர்ஹவுஸ் விரைவில்" என டீசர் ஒன்றை வெளியிட்டதை போலவே பி2 கருவி இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5100 எம்ஏஎச் பேட்டரி திறன்
பி2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளது. உடன் அது ஒரு உலோக பூச்சு கொண்ட ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக பிரேம்கள் கொண்டுள்ளது. உடன் வடிவமைப்பை பொறுத்தமட்டில் அது வைப் தொடர் கருவிகளை போன்றே உள்ளது.

ஆன்-தி-கோ சார்ஜ்
வைப் பி1 மற்றும் பி2 கருவிகளை போன்றே ஆன்-தி-கோ சார்ஜ் கொண்டுள்ள இக்கருவியின் பவர் மூலம் நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்.

டிஸ்ப்ளே, செயலி, ரேம்
மேலும் அம்சங்கள் அடிப்படையில், லெனோவா பி2 அக்கருவியானது 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே (1080x1920 பிக்சல்கள்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இக்கருவி இரண்டு ரேம் வகைகளில் உள்ளன - 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம். 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவியில் 128 ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவும் உண்டு.

கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு
கேமிரா துறையை பொருத்தமட்டில் லெனோவா பி2 கருவி பின்புற கேமிரா ப்ளாஷ் கொண்ட 13 எம்பி மற்றும் செல்பீகளுக்கான ஒரு 5எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. உடன் லெனோவா பி2 கருவியின் முன்பக்கம் ஒரு கைரேகை ஸ்கேனர் உடன் என்எப்சி ஆதரவு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் ஆகியவைகளும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் வருகிறது.

விலை
சீனாவில் கிடைக்கும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட மாறுபாட்டின் விலை சுமார் ரூ.24,500/- என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது இந்தியாவில் ரூ.16,999/- என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. உடன் லெனோவா பி2 கருவி கேம்பைன் கோல்ட் மற்றும் கிராஃபைட் கிரே ஆகிய நிற வகைகளில் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
2016-ல் சந்தையை கலக்கிய லெனோவா ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications