விளையாடுங்க., போன் பேசுங்க., சேட் பண்ணுங்க "ரிப்பீட்டு"- ஏர் கூலிங் ஆதரவோடு லெனோவா லெஜியன் ஒய்90!

|

144 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் ஏர் கூலிங் ஆதரவோடு லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் எனவும் இதன் வெளியீட்டு தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. கேமிங் பிரியர்களும் தங்களது சாதனத்தை வாங்கும் அதன் அம்சங்களில் சமரசம் இன்றி வாங்குகின்றனர். ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி வரவிருக்கும் லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களையும், வெளியீட்டு தேதி குறித்த தகவல்களையும் பார்க்கலாம்.

மிகவும் பிரபலமான கேமிங் ஸ்மார்ட்போன்கள்

மிகவும் பிரபலமான கேமிங் ஸ்மார்ட்போன்கள்

கேமிங் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குறிப்பாக லெனோவா, ஆசஸ், ஐக்யூ போன்ற பிராண்டுகள் தொடர்ந்து கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு புதிய கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட லெனோவா தயாராகி வருகிறது. புதிய லெனோவா கேமிங் ஸ்மார்ட்போனானது 2022 ஜனவரி 1 ஆம் தேதி சிறந்த சக்தி வாய்ந்த அம்சங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

லெனோவா லெஜியன் ஒய் 90

லெனோவா லெஜியன் ஒய் 90

லெனோவா லெஜியன் ஒய் 90 வெளியீட்டு தேதி டீஸ் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் லெஜியன் ஸ்மார்ட்போனின் விவரங்களை லெனோவா வெய்போவில் தெரிவிக்கப்பட்டதை பார்க்கலாம். அதிகாரப்பூர்வ வால்பேப்பர்படி, புதிய லெனோவா லெஜியன் ஒய் 90 2022 ஆம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன் முதலில் சீனாவிலும் பின் உலக சந்தையிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

லெனோவா லெஜியன் ஒய் 90 அம்சங்கள்

லெனோவா லெஜியன் ஒய் 90 அம்சங்கள்

பிராண்டின் மூலம் பகிரப்பட்ட வெய்போ பதிவில், லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனின் அதிக விவரக்குறிப்புகளை பகிர்ந்து கொள்ளவில்லை. நிறுவனம் பகிர்ந்துள்ளபடி இது கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் இதன் காட்சி விவரங்கள் ஆனது லெனோவா லெஜியன் 6.92 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி

720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி

இந்த ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி உடன் 720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித்துடன் வருகிறது. லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போனானது கூடுதலாக கேமிங் ஆதரவோடு எச்டிஆர் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த அம்சம் ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் குறிப்பிட்ட அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் குறிப்பிட்ட அம்சங்கள்

அதோடு மட்டுமின்றி வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது சில அம்சங்களையும் நிறுவனம் பகிர்ந்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த சாதனம் இரட்டை எஞ்சின் ஏர் குளிரூட்டும் அமைப்புடன் வருகிறது. கேமிங் பயன்பாட்டின் போது நீடித்த செயல்திறனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கூலிங் சிஸ்டம்

கூடுதல் கூலிங் சிஸ்டம்

வரவிருக்கும் லெனோவா லெஜியன் ஒய் 90 சாதனத்தின் கூடுதல் கூலிங் சிஸ்டம் குறித்த கூடுதல் விவரங்களை லெனோவா குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உள் நபரால் பகிரப்பட்ட கசிந்த ஸ்கிரீன்ஷாட்டின் மூலம் சில விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போனானது 120 எஃப்பிஎஸ் வேகத்தில் கேம்களை விளையாடுவதையும், 20.30 நிமிட கேமிங்கிற்கு பிறகு ஒப்பீட்டளவில் இது குளிர்ச்சியாகவே இருக்கும் என்பதை ஸ்க்ரீன் கிராப் குறிப்பிடுகிறது.

லெனோவா லெஜியன் ஒய் 90 இந்திய வெளியீடு

லெனோவா லெஜியன் ஒய் 90 இந்திய வெளியீடு

லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் தெரியவில்லை. லெனோவா லெஜியன் மடிக்கணினிகள் மற்றும் பிற கேமிங் அக்ஸசரீஸ் நாட்டில் எளிதாகக் கிடைக்கின்றன. லெஜியன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிற்கு அதிகம் வருவதில்லை. எனவே இந்த லெனோவா லெஜியன் ஸ்மார்ட்போனும் இந்தியாவிற்கு வராமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenova legion Y90 Smartphone Might be Launching on January 1, 2022 With Air Cooling System: Reports Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X