Home
Mobile

4 வருஷம் கழிச்சு நச்சுனு ஒரு போன்.. Lenovo ருத்ர தாண்டவம்.. 8000mAh பேட்டரி, 16GB ரேம், IP69.. எந்த மாடல்?

பல ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்து விலகியிருந்த லெனோவா நிறுவனம், தனது புதிய லெனோவா லெஜியன் ஒய்70 (Lenovo Legion Y70) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் வழியாக, சீனாவில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தைக்குள் களமிறங்கி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனத்தின் கடைசி பிராண்டட் கேமிங் போன் ஆனது 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்ட லெஜியன் ஒய்90 மாடல் ஆகும்.

லெனோவா லெஜியன் ஒய்70 (2026) ஸ்மார்ட்போன் ஆனது, இந்நிறுவனத்தின் மே 2026 வெளியீட்டு நிகழ்வில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது லெனோவா நிறுவனத்தின் லேட்டஸ்ட் லெஜியன் ஒய்900 கேமிங் டேப்லெட் (Lenovo Legion Y900 gaming tablet) உடன் சேர்த்து வெளியிடப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Lenovo ருத்ர தாண்டவம்.. 8000mAh பேட்டரி, 16GB ரேம், IP69.. எந்த மாடல்?

லெனோவா லெஜியன் ஒய்70 (2026) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: சீனாவில், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் மாடலின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.44,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அதே சமயம் 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.53,000 மற்றும் ரூ.58,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக, 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.70,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது

லெனோவோ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் லெனோவா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு உள்ளது. லெனோவா லீஜியன் ஒய்70 (2026) ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக் மற்றும் ஐஸ் சோல் வொயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் எப்போது அறிமுகம் என்பது குறித்து, அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து, எந்த தகவலும் இல்லை.

லெனோவா லீஜியன் ஒய்70 (2026) ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- டூயல் சிம் ஆதரவு
- 6.82-இன்ச் 2K டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 510 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 100 சதவீத DCI-P3 கலர் கேமட்
- 7,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்
- 16GB வரையிலான LPDDR5x ரேம்
- 1TB வரையிலான UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 அபெர்ச்சர் மற்றும் 1/1.56-இன்ச் சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா

- செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 8000mAh ஸ்டார் ரிங் பேட்டரி
- USB டைப்-சி போர்ட் வழியாக 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- பைபாஸ் சார்ஜிங் வசதியையும்
- இந்த பேட்டரியின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது
- ஸ்மார்ட்போனின் எடை சுமார் 224 கிராம்

AnTuTu பெஞ்ச்மார்க்கிங் தளத்தில் லெனோவா லெஜியன் ஒய்70 (2026) ஸ்மார்ட்போன் 32,61,888 புள்ளிகளை பெற்றுள்ளதாக லெனோவா நிறுவனம் கூறுகிறது. ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக இந்த போனில் லெனோவாவின் புதிய "கியான்குன் நிங்ஜின்" (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) கூலிங் சிஸ்டம் உள்ளது. இதில் லிக்விட் கோல்ட் மற்றும் "உயர் செயல்திறன்" கொண்ட வெப்ப கடத்தும் பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்றும் லெனோவா கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Lenovo Legion Y70 2026 8000mAh Battery IP69 16GB RAM 1TB Storage Launched in China Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X