Just In
- 30 min ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- 34 min ago
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- 1 hr ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- 2 hrs ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
Don't Miss
- News
WFH ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? வருகிறதா சிறப்பு "அலொவன்ஸ்!" அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன்?
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்.. பிரசவ அறை, கை குழந்தை, தாய் மரணம், இண்டர்வியூவ் மத்தியில் பணிநீக்கம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இது புதுவகை செல்பீ கேமராவா இருக்கே.! லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்த்த அசுஸ் ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் லெனோவா நிறுவனமும் போட்டியாக லீஜியன் போன் டூயல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இதுவும் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

அதன்படி இப்போது அறிமுகம் செய்யப்பட்ட லெனோவா லீஜியன் போன் டூயல் ஆனது பாப் செல்பீ கேமரா, இரட்டை பேட்டரி ஆதரவுஉள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

இந்த லெனோவா லீஜியன் போன் டூயல் சாதனம் ஆன டூயல் சிம்(நானோ) ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் ஹாரிசாண்டல் யூஐ விருப்பம், பின்பு ஆறு தனிப்பயனாக்கப்பட்ட தளவமைப்பு தீம்ஸ் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது.மேலும் இந்த சாதனத்தில் ஹோம்
பயன்முறை உள்ளது, இது உங்கள் உள்ளடக்கத்தை அனுப்ப அல்லது இணைக்கப்பட்ட மானிட்டர் அல்லது எச் டிவியில் உங்களுக்கு பிடித்த விளையாட்டை வயர்லெஸ் விசைப்பலகை மற்றும் சுட்டி அல்லது கம்பி துணையுடன் இணைக்க அனுமதிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் சேர்த்தல்களில் ஒன்று லீஜியன் அசிஸ்டென்ட், இது மெய்நிகர் ஜாய்ஸ்டிக் செயல்பாட்டை செயல்படுத்துகிறது,மற்றும் மெய்நிகர் கேம்பேட் கட்டுப்பாடுகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வீடியோக்கள் அல்லது நேரடி ஸ்ட்ரீமிங் கேம்களைப் பதிவுசெய்யும்போது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்க நான்னு நாய்ஸ் கேன்சலேஷன் ஒலிவாங்கிகளையும் பெறுவீர்கள்.

லெனோவா லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு உடன் லீஜியன் ஒஎஸ் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 20எம்பி பாப் செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த சாதனம், இது பக்கவாட்டில் உள்ள பாப்-அப் தொகுதி ஆகும். குறிப்பாக இந்த செல்பீ கேமரா லாண்ட்ஸ்கேப் பயன்முறையில் கேம்களை விளையாடும்போது வீடியோக்களைப் பதிவு செய்ய அல்லது செல்பீக்களைப் பிடிக்க அருமையாக உதவுகிறது.

லெனோவா லீஜியன் போன் டூயல் மாடலில் இரண்டு 2500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதாவது மொத்தமாக 5000எம்ஏஎச் பேட்டரிதிறன் கொண்டுள்ளது. மேலும் 90வாட் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது, எனவே இது 50சதவிகிதம் சார்ஜை வெறும் 10நிமிடங்கிளல் சேர்க்கும். முழுமையாக சார்ஜ் செய்ய 30நிமிடங்கள் ஆகும்.

மேலும் இந்த சாதனம் வெப்பத்தை சிதறடிக்க செப்பு குழாய்களுடன் இரட்டை திரவ-குளிரூட்டலைக் கொண்டுள்ளது.5 ஜி, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ax, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, கியூசட்எஸ்எஸ் (எல் 1 + எல் 5), 2 எக்ஸ் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.37,400-ஆக உள்ளது. தற்சமயம் இந்த சாதனம் சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470