ஏப்ரல் 8: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் லெனோவா லீஜியன் 2 ப்ரோ.!
லெனோவோ நிறுவனம் தனது புதிய லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 8-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த கேமிங் சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா லீஜியன் 2 ப்ரோ
Geekbench தளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாடல் எண் L70081என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு அமசங்களுக்கு அருமையாகஉதவும்.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 110 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11
அதேபோல் இந்த புதிய லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி /ஜி /என், புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications