என்னது ஸ்மார்ட்போனில் கூலிங் ஃபேன் இருக்கா?- நாளை வெளியாகும் லெனோவா லெஜியன் 2 ப்ரோ!

|

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கூலிங் ஃபேன் அம்சத்தோடு பாப்-அப் செல்பி கேமராவுடன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பாப் அப் செல்பி கேமரா அம்சத்தோடு வரும் எனவும் இதில் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு சாம்சங் டிஸ்ப்ளேவுடன் 720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பாப் அப் செல்பி கேமரா அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் காணக்கூடிய குளிரூட்டும் வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிறுவனம் சீன மைக்ரோ பிளாக்கிங் வலைதளமான வெய்போவில் பகிர்ந்துள்ளது. லெனோவா லெஜியன் ஸ்மார்ட்போன் குறித்து புகைப்படங்கள் அதன் முன்புறம் மற்றும் பின்புறம் காட்சிகளை காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தனித்துவ வடிவமைப்பான ஆர்ஜிபி லைட்டிங் மூலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த கேமிங் போன் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை குறிக்கிறது. இது ஜூலை 2020 ஆம் ஆண்டில் வெளியான லெனோவா லெஜியன் டூவலுக்கு அடுத்தபடியான சாதனமாக இருக்கும்.

லெனோவா லெஜியன் 2 ப்ரோ வெளியீட்டு தேதி

லெனோவா லெஜியன் 2 ப்ரோ வெளியீட்டு தேதி

லெனோவா லெஜியன் 2 ப்ரோ வெளியீட்டு தேதியுடன் கூடிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. லெனோவா லெஜியன் டூவல் இதுவரை பிற சந்தைகளில் வெளியிடப்படாததால் இந்த ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

சிறிய உள்ளடக்க விசிறி

சிறிய உள்ளடக்க விசிறி

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் பின்புற வெள்ளை மற்றும் பிளாக் பூச்சுடனும், ஒரு சிறிய உள்ளடக்க விசிறியையும் மையத்தில் கொண்டுள்ளதை காட்டுகிறது. மேலும் கேமிங் ஸ்மார்ட்போனில் குளிரூட்டல் விசிறியை காணப்படுவதை சாதாரணமாக கடந்துவிட முடியாது. இந்த சிறப்பு தனித்துவமான அம்சமாகும். இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு வீக்கத் தன்மை வசதியோடு வருகிறது. அதேபோல் ஆர்ஜிபி லைட்டிங் மூலம் லெனோவா லோகா காணப்படுகிறது.

முன்பக்கத்தில் பாப் அப் கேமரா வசதி

முன்பக்கத்தில் பாப் அப் கேமரா வசதி

மற்றொரு டீசர் மூலம் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் பாப் அப் கேமரா வசதியை காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது என கூறப்படுகிறது. செல்பி கேமரா வசதிக்கு துளை பஞ்ச் கட்அவுட் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழுத்திரை அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

தனித்துவ திரவ குளிரூட்டல் வசதி

தனித்துவ திரவ குளிரூட்டல் வசதி

லெனோவா லெஜியன் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போனுக்கு தேவையான 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.92 இன்ச் சாம்சங் டிஸ்ப்ளே, 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதேபோல் இதில் 5500 எம்ஏஎச் பேட்டரி, 720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 888 எஸ்ஓசி விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் அதிக பயன்பாட்டின் போது அதன் வெப்பத்தை குறைக்க தனித்துவ திரவ குளிரூட்டல் வசதியும் இருக்கிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenovo Legion 2 Pro Smartphone Launching on April 8 With Cooling Fan, 720Hz Touch Sampling rate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X