Home
Mobile

Lenovo Legion 2 Pro அறிமுகம் உறுதியானது.. அடேங்கப்பா முன்பை விட பெரிய டிஸ்பிளே.!

லெனோவா தனது அடுத்த ஸ்மார்ட்போனை லெஜியன் தொடரில் அறிமுகப்படுத்த உள்ளது, இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் லெனோவா லெஜியன் 2 ப்ரோ என்று அழைக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தொடர்ச்சியான கசிவுகள் மற்றும் வதந்திகளை இணையத்தில் நாம் முன்பே கண்டிருக்கிறோம். மேலும் இந்த நிறுவனம் ஸ்மார்ட்போனை 2021 ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்வதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

லெனோவா லெஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்

லெனோவா நிறுவனம் இன்று தனது அதிகாரப்பூர்வ வெய்போ பக்கத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே தகவல்களை வெளிப்படுத்தும் வரவிருக்கும் கேமிங் ஸ்மார்ட்போனின் விளம்பர போஸ்டரை நிறுவனம் இப்பொழுது பகிர்ந்துள்ளது. இதன்படி, லெனோவா லெஜியன் 2 ப்ரோ போனின் 6.92 இன்ச் பிரமாண்டமான டிஸ்ப்ளேவுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் லெஜியன் புரோவை விட ஒப்பீட்டளவில் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Lenovo Legion 2 Pro டிஸ்பிளே விபரம்

Lenovo Legion 2 Pro டிஸ்பிளே விபரம்

லெனோவா நிறுவனம் காட்சி அளவை அதிகரித்திருந்தாலும், புதுப்பிப்பு வீதம் 144Hz ஆகவே உள்ளது. லெனோவா சீனா மொபைல் வணிகத் துறை பொது மேலாளர் சென் ஜின், ஸ்மார்ட்போனில் சாம்சங் AMOLED E4 டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்பிளேவாக பொருத்தப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு இந்த ஸ்மார்ட்போன் முழு சமச்சீர் திரையுடன் வரும் என்றும் ஜின் அறிவுறுத்துகிறார், இது விரைவான புதுப்பிப்பு வீதத்தையும் குறைந்த லாடென்சியையும் வழங்கும் திறன் கொண்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் லூ பெஞ்ச்மார்க் மதிப்பெண் என்ன தெரியுமா?

மாஸ்டர் லூ பெஞ்ச்மார்க் மதிப்பெண் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் சில முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் மாஸ்டர் லு பெஞ்ச்மார்க்கிலும் காணப்பட்டது. லெஜியன் 2 பட்டியலின் படி, ப்ரோ மாடல் 1080 x 2460 பிக்சல் டிஸ்ப்ளே உடன் முழு எச்டி பிளஸ் தெளிவுத்திறனை ஆதரிக்கும். இது 20.5: 9 என்ற விகிதத்துடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மாஸ்டர் லூ பெஞ்ச்மார்க்கில் மாடல் எண் L70081 உடன் பட்டியலிடப்பட்டது மற்றும் மொத்த மதிப்பெண் 962,155 ஐ இது பெற்றுள்ளது. இதில் CPU சோதனையில் மட்டும் 344,384 புள்ளிகள் பெற்றுள்ளது.

லெஜியன் 2 ப்ரோ ஸ்டோரேஜ்

லெஜியன் 2 ப்ரோ ஸ்டோரேஜ்

அதேபோல், ஜி.பீ.யூ சோதனையில் 353,510 புள்ளிகளை இந்த புதிய ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. அத்துடன், ஸ்மார்ட்போனின் நினைவக சோதனையில் 121,136 புள்ளிகள் மற்றும் சேமிப்பு சோதனையில் 143,125 புள்ளிகளை லெஜியன் 2 ப்ரோ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டியலில் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகள் இருப்பதையும் பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Legion 2 Pro is confirmed to arrive with a massive 6.92-inch display : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X