ஸ்மார்ட்போன் உலகின் கவனத்தை ஈர்க்க வரும் லெனோவோ!

Posted By:

ஸ்மார்ட்போன் உலகின் கவனத்தை ஈர்க்க வரும் லெனோவோ!

புதிதாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் 5 ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது லெனோவோ. லெனோவோ ஏ-60+, லேனோவோ எஸ்-880, லெனோவோ பி-700-ஐ, லெனோவோ கே-860 மற்றும் லெனோவோ எஸ்-560 என்ற பெயரில் வரிசையாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க காத்திருக்கிறது லெனோவோ நிறுவனம்.

உலகளவில் 600 கோடி மொபைல்போன்களில், ஸ்மார்ட்போன்கள் மட்டும் 90 கோடி இருப்பதாகவும், இதனால் சிறப்பான தொழில் நுட்ப வசிதகளை வழங்கி ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 2ம் இடத்தினை வகிக்க முயற்சி செய்வதாகவும் லெனோவோ நிறுவனத்தின் துணை முதல்வரான ஜே.டி ஹாவேர்டு தெரிவித்துள்ளார்.

இதில் லெனோவோ கே-860 ஸ்மார்ட்போன், 5 இஞ்ச் திரையில் அமர்களப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஃபேப்லட்டுகளின் திரை அளவை கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இதில் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸரினையும் கொடுக்கும்.

லெனோவோ கே-860 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினால் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான தகவல்களை பெற முடியும். செமா ஃபோட்டோ ஷாட்களை எடுக்க இதன் சிறப்பான 8 மெகா பிக்ஸல் கேமரா உதவும். இந்த ஸ்மார்ட்போன் 28,499 விலை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மீண்டும் இந்த நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான லெனோவோ எஸ்-560, 9.9 எம்எம் தடிமன் கொண்டதாக இருக்கும். இதில் டியூவல் சிம் நெட்வொர்க் வசதியினை சிறப்பாக பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,999 விலை கொண்டதாக இருக்கும்.

லெனோவோ எஸ்-560 ஸ்மார்ட்போன் சிறப்பான டாலி டிஜிட்டல் ப்ளஸ் தொழில் நுட்ப வசதியினையும் கொடுத்து உதவும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் கொண்டதாக இருக்கும். முதலில் கூறப்பட்டது போல 5 இஞ்ச் திரையாக இல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் சற்று குறைந்த திரையினை கொடுப்பதாக இருக்கும். இதில் டியூவல் கோர்

பிராசஸர் மற்றும் 5 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவற்றை பெற முடியும்.இந்த ஸ்மார்ட்போன் ரூ. 14,499 விலையினை ஒட்டியதாக இருக்கும் என்று தெரிகிறது.

லெனோவோ பி-700-ஐ, டியூவல் சிம் வசதியில் கலக்கும் அம்சம் கொண்டதாக இருந்தது. 28 மணி நேரம் டாக் டைம், 13 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12,499 விலையில் இருக்கும். லெனோவோ ஏ-60+ ஸ்மார்டோபோன் 3.5 இஞ்ச் ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தினை கொடுக்கும். லெனோவோ ஸ்மார்ட்போன் ரூ. 6,499 விலை கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot