16எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் மோட்டோ கிரீன் போமெலோ.!
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை மோட்டோ கிரீன் போமெலோ என்ற புதிய பெயர் கொண்டு அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை மோட்டோ கிரீன் போமெலோ என்ற புதிய பெயர் கொண்டு அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது.

மோட்டோ கிரீன் போமெலோ ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த மோட்டோ கிரீன் போமெலோ ஸ்மார்ட்போனின் விலையைப் பொறுத்தவரை ரூ.15,750-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மோட்டோ கிரீன் போமெலோ:
மோட்டோ கிரீன் போமெலோ ஸ்மார்ட்போனில் 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது. மேலும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 430:
இக்கருவி 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430செயலியைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1நௌகட்இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம்:
இந்த மோட்டோ கிரீன் போமெலோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ கிரீன் போமெலோ ஸ்மார்ட்போனில் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications