தீபாவளி சரவெடியாக லினோவா மொபைல்!!!

Written By:

உலக அளவில் கம்பியூடர்கள் மற்றும் லேப்டாப்களையே லினோவா நிறுவனம் அதிகமாக தயாரித்து வந்துள்ளது. இப்பொழுது அந்த நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

சீனாவில் லினோவா தான் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் கம்பெனி என்பது பலருக்கு தெரியாது. லினோவாவின் ஆதிக்கம் கம்பியூட்டர் மற்றும் லேப்டாப்புடன் நின்றுவிடவில்லை என்பதற்க்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவிலும் லினோவா ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் மக்களிடத்தில் வேகமாக பிரபலமாகி வருகின்றன. லினோவா k900 ஸ்மார்ட்போன் 2013ன் ஜூன் மாதம் வெளியிடப்பட்டது, இதன் இன்டெர்னல் மெமரி 16ஜிபி இன்டெர்னல் மெமரிதான்.

லினோவா k900 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

தீபாவளி சரவெடியாக லினோவா மொபைல்!!!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

32ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட புதிய லினோவா k900 மொபைல்தான் வரும் நவம்பர் மாதம் தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கிறது. 5.5இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ் இதில் இருக்கும்.

மேலும், 2GHZ டியுல் கோர் பிராசஸர், 2ஜிபி ராம், ஆன்டிராய்ட் 4.2ஜெல்லிபீன் ஓஎஸ், 13மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 3ஜி, wi-fi, புளுடூத், 2500mAh பேட்டரி ஆகிய அம்சங்களை லினோவா k900 கொண்டுள்ளது.

16ஜிபி உடன் வெளிவந்த லினோவா k900ல் எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ் வசதி இல்லை. இந்த மொபைலை பயன்படுத்துபவர்களுக்கு 16ஜிபி பத்தாமல் கூட போகலாம். இந்த குறையை தீர்கவே லினோவா நிறுவனம் 32ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் k900யை வெளியிட உள்ளது.Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot