லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும்.

தற்சமயம் லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3,000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறுது,மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
லெனோவா கே8 பிளஸ் ஆனது மாலி டி888 ஜிபியூ உடன் 3 ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி25 அதன்பின் 2.6ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் செயலி
கொண்டிருக்கும் மற்றும் முன்னர் குறிப்பிட்டப்படி இந்த கைபேசியில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு மற்றும் ஒல்லோபொபிக் பூச்சு போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.
3 ஜிபி / 4 ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே8 நோட் ஆனது 32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு என இரண்டு மாதிரிகளில் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

4ஜி எல்இடி, வைஃபைஇ மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு ஆதாரவுகளையும்
கொண்டுள்ளது இந்த லெனோவா கே8 பிளஸ்.


Click it and Unblock the Notifications