Home
Mobile

செப்.6 முதல் லெனோவா கே8 ப்ளஸ் (அம்சங்கள்).!

வெளியாகும் லெனோவா கே8 பிளஸ் ஆனது ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும்.

By Muthuraj

லெனோவா நிறுவனம் சமீபத்தில் அதன் லெனோவா கே8 நோட் சாதனத்தை இந்தியாவில் இரண்டு வகைகளில் - 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம், 64ஜிபி உள் சேமிப்பு கொண்ட 4 ஜிபி ரேம் - முறையே ரூ.12,999/- மற்றும் ரூ.13,999/-க்கு அறிமுகம் செய்தது. இப்போது இந்நிறுவனம் வருகிற செப்டம்பர் 6 அன்று இந்தியாவில் லெனோவா கே 8 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

லெனோவா இந்தியா ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உட்பட அதன் சமூக ஊடக தளங்களில் கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் டீஸிங் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வெளியாகும் லெனோவா கே8 பிளஸ் ஆனது ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும்.

டால்பி ஆடியோ அம்சம்

டால்பி ஆடியோ அம்சம்

வெளியான லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போனின் டீஸர்களில் இருந்து இக்கருவி டால்பி ஆடியோ அம்சம் கொண்டிருப்பதைக் காட்டுகிறது மற்றும் இந்த தொலைபேசி கே8 நோட் போலவே ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

சிங்கிள்-கோர் டெஸ்டில் 861 புள்ளி

சிங்கிள்-கோர் டெஸ்டில் 861 புள்ளி

முன்னர் கீக்பெஞ்ச் தரப்படுத்தல் இணையத்தளத்தில் காணப்பட்டிருந்த லெனோவா கே8 பிளஸ், சிங்கிள்-கோர் டெஸ்டில் 861 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனைகளில் 3761 புள்ளிகளையும் பெற்றிந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

3 ஜிபி ரேம்

3 ஜிபி ரேம்

மேலும் அந்த பட்டியலின்படி, லெனோவா கே8 பிளஸ் ஆனது மாலி டி888 ஜிபியூ உடன் 3 ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்20 1.69 ஜிகாஹெர்ட்ஸ் டிகா-கோர் செயலி கொண்டிருக்கும் மற்றும் முன்னர் குறிப்பிட்டப்படி இந்த கைபேசியில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

நினைவூட்டும் வண்ணம், முன்னர் அறிமுகமான லெனோவா கே8 நோட் ஆனது ஒரு யூனிபாடி உலோக வடிவமைப்பு மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட (1080x1920 பிக்சல்கள்) 5.5 அங்குல முழு எச்டி காட்சி கொண்டுள்ளது.

32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு

32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு

3 ஜிபி / 4 ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே8 நோட் ஆனது 32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு என இரண்டு மாதிரிகளில் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

லெனோகேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. 4ஜி / எல்இடி, வைஃபை, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு ஆதாரவுகளையும் கொண்டுள்ளது.

நானோ-பூச்சு

நானோ-பூச்சு

நீர் விரட்டும் திறன் கொண்ட நானோ-பூச்சு மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ள இக்கருவி அளவீட்டில் 154.5x75.9x8.5 மிமீ மற்றும் 180 கிராம் எடையைக் கொண்டுள்ளது. மேலும் ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகிய உணரிகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo K8 Plus to launch in India on September 6. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X