4000 எம்ஏஎச், 4ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே6 பவர் (விலை, அம்சங்கள்).!
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!
லெனோவா இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நேற்று) அதன் கே6 பவர் ஸ்மார்ட்போனின் ஒரு புதிய மாறுபாட்டை அறிமுகம் செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் வெளியான 3ஜிபி ரேம் மாறுபாட்டை விட ரூ.1000/- அதிகமான விலையில் இக்கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லெனோவா கே6 பவர் கருவியானது லெனோவா கே6 மற்றும் லெனோவா கே 6 நோட் ஆகிய கருவிகளுடன் ஐஎஸ்ஏ 2016-ல் தொடங்கப்பட்டது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி சேமிப்பு மற்றும் 3ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு என்ற அந்த சமயத்தில் இரண்டு வகைகளில் அறிமுகமாகி நவம்பர் மாதத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இப்போது அதே கருவியின் 4ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மாறுபாட்டை லெனோவா இந்தியாஅறிமுகப்படுத்தியுள்ளது.

விலை
ரூ.10,999/- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த கருவி ஜனவரி 31-ஆம் தேதி 12 மணி முதல் அதன் 3ஜிபி மாறுபாடும் உடன் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பேட்டரி
லெனோவா கே6 பவர் கருவியின் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே இக்கருவியின் சிறப்பம்சமாக அதன் பேட்டரி திகழ்கிறது. இக்கருவியின் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியானது 96.5 மணி நேர இசை பின்னணி, 13.6 மணி நேர வீடியோ பின்னணி, 48 மணி நேர குரல் அழைப்புகள், 12.6 மணி நேர வலை உலாவல் மற்றும் 649 மணி நேர காத்திருப்பு நேரம் வரை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டால்பி
உடன் இந்த அல்டிமேட் பவர் சேவர் கருவியானது ஒரு ரீவர்ஸ் சார்ஜ் ஆக செயல்பட்டு ஒரு பவர் பேங்க் ஆகவும் உதவும். இயர் போன்களுக்கு டால்பி அட்மோஸ் ஆடியோ என்ஹாச்மென்ட்ஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், தியேட்டர்மேக்ஸ் மீடியா கன்சப்ஷன் சர்வீஸ் மற்றும் பின்புற ஒரு கைரேகை சென்ஸார் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு
இரட்டை சிம் (நானோ சிம்) ஆதரவு கொண்ட இந்த லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போன் அந்த நிறுவனத்தின் சொந்த வைப் ப்யூர் யூஸர் இன்டர்பேஸ் உடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது.

கேமிரா
உடன் ஒரு 5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் அக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 எஸ்ஓசி மற்றும் அட்ரெனோ 505 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது. கே6 பவர் ஒரு சோனி ஐஎம்எக்ஸ்258 சென்சார், பிடிஏஎப் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 எம்பி பின்பக்க கேமிரா மற்றும் ஒரு சோனி ஐஎம்எக்ஸ் 219 சென்சார் மற்றும் ஒரு வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமிரா கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்
லெனோவா கே6 பவர் கருவியின் உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி நீட்டிக்கும் வசதி உடன் 4ஜி, எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, எப்எம், ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு விருப்பங்கள் கொண்டுள்ளது. அளவீடடில் 141.9x70.3x9.3மிமீ மற்றும் 145 கிராம் உள்ள எடையுள்ளது.

மேலும் படிக்க
ரெட்மீ நோட் 4 போனால் என்ன.? உங்களுக்கு பல ஆப்ஷன்கள் இருக்கு.!


Click it and Unblock the Notifications