லெனோவா கே6 பவர், கே6 நோட் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
Lenovo K6 Power, K6 Note Start Receiving Android 7.0 Nougat Update in India ; Read more about this in Tamil GizBot.
இந்தியாவில் தற்போது லெனோவா கே6 பவர் மற்றும் கே6 நோட் பொறுத்தமட்டில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 7.0 அப்டேட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் இயக்கம் சற்று வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

லெனோவா கே6 பவர்:
இக்கருவி 5அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1080)வீடியோ பிக்சல் இடம்பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

லெனோவா கே6 பவர் சாப்ட்வேர்:
1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப் டிராகன் 430 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம்தற்போது இயங்குகிறது.

லெனோவா கே6 கேமரா:
இதனுடைய ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

லெனோவா கே6 நோட்:
இக்கருவி 5.5அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1080-1920)வீடியோ பிக்சல் இடம்பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

லெனோவா கே6 நோட் சாப்ட்வேர்:
1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப் டிராகன் 430 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம்தற்போது இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.11 , ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ , யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications